Header Ads



அர­சாங்க அதி­கா­ரத்­து­டனும், அனு­ச­ர­ணை­யு­டனும் கிராண்ட்பாஸ் பள்­ளி­வாசல் மீது தாக்­குதல்

வெலி­வே­ரிய சம்­ப­வத்தை மூடி மறைப்­ப­தற்­காகவே அர­சாங்கம் தனது அதி­கா­ரத்­து­டனும் அனு­ச­ர­ணை­யு­டனும் கிராண்ட்பாஸ் பள்­ளி­வாசல் மீது தாக்­குதல் மேற்­கொண்­ட மை மறைக்­கக்­கூ­டிய இரக­சி­ய­மல்ல என்று மக்கள் விடு­தலை முன்­னணி (ஜே.வி.வி.) சுட்­டி க்­காட்­டி­யுள்­ளது. 

இச் சம்­ப­வத்­தி­னூ­டாக ஆறுக்கும் மேற்­பட்டோர் காய­ம­டைந்­துள்­ள­துடன் மக்­களின் உடை­மை­க­ளுக்கும் சேதம் விளை­விக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றாக அரசு தனது தேவைக்­காக வேண்டி இன­வாத செயற்­பாட்டை தூண்டி விடு­வது நாட்­டுக்கு பய­ன­ளிக்­கக்­கூ­டி­ய­தொன்­றல்ல என்று அக்­கட்சி எச்­ச­ரித்­துள்­ளது.

இது குறித்து அக்­கட்சி ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இன­வாத செயற்­பாட்­டி­னூ­டாக 30 வரு­டங்கள் இரத்தம் சிந்திய பின்பும் மீண்­டு­மொரு முறை அவ்­வா­றான செயற்­பாட்டை அரசு தூண்­டி­வி­டு­வது கவ­லை­ய­ளிக்­கி­றது.

ஒரு பயங்­க­ர­வாத செயற்­பாட்­டினால் இன்­னு­மொரு பயங்­க­ர­வாதம் தோன்­று­மென வர­லாற்று சான்­றுகள் எடுத்து கூறு­கின்­றன. அத்­துடன் இன­வாத போக்­குடன் செயற்­பட்டால் பயங்­க­ர­வா­தமே தோன்றும் என்­பதில் எவ்­வித ஐய­மு­மில்லை.

கிராண்ட்பாஸ் தாக்­கு­த­லா­னது கடந்த மாதங்­க­ளி­லி­ருந்தே இப்­பள்­ளி­வாசல் தொடர்­பாக பெளத்த அமைப்­புக்கள் சட்­டத்தை தனது கையில் எடுத்து செயற்­பட்­டன. இந்த இன­வாத அமைப்­புக்­க­ளுடன் அரசு ஒட்டி உற­வா­டு­கின்­றமை தெளி­வான விட­ய­மாகும்.

அதே­போன்று அர­சாங்­கத்­திற்கே இவ்­வா­றான இன­வாத செயற்­பா­டுகள் தேவைப்­ப­டு­கின்­றன. இதனை பயன்­ப­டுத்தி நாட்டில் இடம்­பெறும் அரா­ஜக மற்றும் அரசின் தேவையற்ற செ­யற்­பாட்­டி­லி­ருந்து மக்­களின் கவ­னத்தை திசை திருப்­பவே அரசு தந்­தி­ரோ­பா­ய­மாக செயற்­ப­டு­கின்­றது.

அத்­துடன் அரசு இவ்­வாறு இன­வாத போக்­குடன் செயற்­பட்டால் அரசின் தேவை பூர்த்­தி­யா­னாலும் நாடு படு­கு­ழி­யி­லேயே தள்­ளப்­ப­டு­வது குறித்து அரசு கவ­னத்­துடன் செயற்­பட வேண்டும்.

எனவே இவ்­வா­றான தீவிர போக்­கு­க­ளுக்கு மக்கள் ஆத­ரவு நல்­கக்­கூ­டாது. அத்­துடன் இப்­பள்­ளி­வாசல் மீது­தாக்­குதல் நடத்­தி­ய­வர்­க­ளுக்கு உரிய சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென அக்­கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

1 comment:

Powered by Blogger.