அரசாங்க அதிகாரத்துடனும், அனுசரணையுடனும் கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது தாக்குதல்
வெலிவேரிய சம்பவத்தை மூடி மறைப்பதற்காகவே அரசாங்கம் தனது அதிகாரத்துடனும் அனுசரணையுடனும் கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொண்ட மை மறைக்கக்கூடிய இரகசியமல்ல என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.வி.) சுட்டி க்காட்டியுள்ளது.
இச் சம்பவத்தினூடாக ஆறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் மக்களின் உடைமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக அரசு தனது தேவைக்காக வேண்டி இனவாத செயற்பாட்டை தூண்டி விடுவது நாட்டுக்கு பயனளிக்கக்கூடியதொன்றல்ல என்று அக்கட்சி எச்சரித்துள்ளது.
இது குறித்து அக்கட்சி ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இனவாத செயற்பாட்டினூடாக 30 வருடங்கள் இரத்தம் சிந்திய பின்பும் மீண்டுமொரு முறை அவ்வாறான செயற்பாட்டை அரசு தூண்டிவிடுவது கவலையளிக்கிறது.
ஒரு பயங்கரவாத செயற்பாட்டினால் இன்னுமொரு பயங்கரவாதம் தோன்றுமென வரலாற்று சான்றுகள் எடுத்து கூறுகின்றன. அத்துடன் இனவாத போக்குடன் செயற்பட்டால் பயங்கரவாதமே தோன்றும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
கிராண்ட்பாஸ் தாக்குதலானது கடந்த மாதங்களிலிருந்தே இப்பள்ளிவாசல் தொடர்பாக பெளத்த அமைப்புக்கள் சட்டத்தை தனது கையில் எடுத்து செயற்பட்டன. இந்த இனவாத அமைப்புக்களுடன் அரசு ஒட்டி உறவாடுகின்றமை தெளிவான விடயமாகும்.
அதேபோன்று அரசாங்கத்திற்கே இவ்வாறான இனவாத செயற்பாடுகள் தேவைப்படுகின்றன. இதனை பயன்படுத்தி நாட்டில் இடம்பெறும் அராஜக மற்றும் அரசின் தேவையற்ற செயற்பாட்டிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே அரசு தந்திரோபாயமாக செயற்படுகின்றது.
அத்துடன் அரசு இவ்வாறு இனவாத போக்குடன் செயற்பட்டால் அரசின் தேவை பூர்த்தியானாலும் நாடு படுகுழியிலேயே தள்ளப்படுவது குறித்து அரசு கவனத்துடன் செயற்பட வேண்டும்.
எனவே இவ்வாறான தீவிர போக்குகளுக்கு மக்கள் ஆதரவு நல்கக்கூடாது. அத்துடன் இப்பள்ளிவாசல் மீதுதாக்குதல் நடத்தியவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அக்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

appreciated the statement
ReplyDelete