குவைத்தில் இலங்கை முஸ்லிம்களின் பெருநாள் நிகழ்வுகள் (படங்கள்)
இக்ரஃ இஸ்லாமிய சங்கம் (IIC Kuwait ) ,குவைத் வாழ் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கான ஈத் அல் பித்ர் தொழுகையை இம்முறையும் குவைத் சிட்டியில் அமைந்துள்ள 'மஸ்ஜித் பின் நப்ஹான்' இல் மிகவும் சிறப்பாக நடாத்தியது . இதில் இலங்கையைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்களும் , பெண்களும் கலந்து கொண்டனர்.
இவ்வருடம் சவூதி அரேபியாவில் இடம்பெற்ற சர்வதேச அல் குர்ஆன் மனனப் போட்டியில் முதலாமிடம் பெற்ற இலங்கையைச் சேர்ந்த 'ஹாபிஸ் ரிப்தி ரிஸ்கான்' அவர்கள் பெரு நாள் தொழுகையை நடாத்தி வைத்தார்கள். அத்துடன் இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து சிறப்பித்தார் .
இக்ரஃ இஸ்லாமிய சங்கம் (IIC Kuwait ) கடந்த இருபது வருடங்களாக குவைத் வாழ் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு பல் வேறு வகையான மார்க்க வழிகாட்டல்களை செய்துகொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Post a Comment