புனிதப் ஹஜ்ஜுப் பயணம் பௌத்தசாசன அமைச்சிடமா...?
(இப்னு பாரிஸ்)
ஹஜ்ஜின் புனிதத்துவத்தை புரியாதோர் எவரும் இருக்கமாட்டார்கள். அதனை நிறைவேற்ற அன்று தொட்டு இன்று வரை மிகச் சிரமப்பட்டு மக்கள் போய் வருகின்றனர். இருப்பினும் ஹஜ்ஜு ஒரு வியாபாரமாக மாறியதன் பின்பு மக்களைப் பிளிந்து உறிஞ்சி பணம் கறக்கும் ஒரு வழியாகவும் தமக்கு கூஜா தூக்கியவர்களுக்கு உதவும் வழியாகவும் காபிர்களிடம் சகலரையும் சங்கமிக்கச் செய்யும் இடமாகவும் அமைத்து விட்டதைப் பார்த்து சமூகம் அழுகிறது. எந்தவொரு கட்சிவேறுபாடுமின்றி முஸ்லிம் அரசியல்வாதிகள் அல்லாஹ்வை பயப்படாது நடந்து கொள்ளும் விதம் அல்லாஹ்வை மறந்த செயலாகும்.
ஜனாதிபதி அவர்கள் எவரேனும் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரை ஹஜ்ஜுக்கு பொறுப்பான அமைச்சராக நியமித்தால் போதும் ஜனாதிபதியிடம் சென்று தன்னையும் ஹஜ்ஜுக்கு பொறுப்பான பங்காளி அமைச்சராக மாற்றிவிடுமாறு கோரும் கேவலமான நிலையை பார்த்து முஸ்லிம் சமூகம் கண்ணீர் வடிக்கிறது. நியமிக்கப்பட்ட இருவரும் ஜனாதிபதியையோ சமய விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சரையோ போய் சந்தித்து மற்றவரின் இறைச்சி தின்னும் பழக்கம் அவர்களை விட்டபாடில்லை. போதாக் குறைக்கு மானபங்க நஷ்டஈட்டு வழக்கு தொடர்வதுமான கேவலமான நடவடிக்கைகள் அரங்கேரி விடுகின்றன.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜனாதிபதி தெரிவுசெய்த பொறுப்பான அமைச்சர்களுக்கு மேலாகவும் ஒரு அரசியல் பிரமுகர் தன்னையும் அப்பொறுப்பில் அமர்த்த வேண்டுமென கேட்டுப் பெற்றுக்கொண்டார். அவ்வமயம் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று பொறுப்பானவர்கள் ஆகிவிட்டனர். அதைத்தான் கலிமாவை மொழியாதோர் விரும்புகின்றனர் என்பதைக்கூட இவர்கள் விளங்காதுள்ளனர். அவ்வாறு சென்றவர் அங்கு என்ன செய்தார் என்பதை அவ்வருடம் ஹஜ்ஜுக்கு சென்றோர் நன்கறிவர். ஆயிரக்கணக்கில் பணம் அறவிடப்பட்டதும் மினாவில் ஹாஜிகள் பட்ட வதையுமே அவர்களுக்கு கூலியாக கிடைத்தன. அவர் இப்போது அரசுக்கெதிராகவே மேடையேரி இலாபம் தேடுவதைப் பார்க்கிறோம். கடந்த வருடம் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட இழுபரி நீதிமன்றப் படியேரி தீர்வைப் பெற்றுக்கொண்ட அசிங்கமான நினைவுகளும் மனக்கண்முன்னே தோன்றுகின்றன.
இவ்வருடம் பொறுப்பான ஒருவர் நியமிக்கப்பட்ட நிலையில் மற்றுமொருவர் அரசத் தலைவர்களை நெருங்கி தன்னையும் போடவேண்டுமென அடம்பிடித்து பெற்றுக்கொண்டதன் விளைவே ஒவ்வொரு முகவர்களுக்கும் 5,10,15,25 என்றெல்லாம் கோட்டா பிரிக்கப்பட்டது. அதன் முடிவு 3,4 இலட்சம் கொடுத்து ஹஜ்ஜுக்கு செல்லவிருந்த ஹாஜிகள் சுமார் 7 இலட்சம் வரை செலுத்தவேண்டிய பரிதாபமான நிலையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
கேவலம் வழக்குத் தொடர்ந்து அதன் முடிவுகளுக்கு அப்பால் புத்தசாசன அமைச்சிடம் சரணடைந்து இங்குதான் புத்தபெருமானின் மனம் கமழ்கிறது என்று நாக்கூசாமல் பிதற்றிய ஹஜ் முகவர்களும் காணப்படுகின்றனர். இவ்வாறு நீதிமன்றம் என்றும் புத்தசாசன அமைச்சென்றும் சென்றுமுடிந்த ஹஜ்ஜின் பிரச்சினை என்ன முடிவைத்தரும் என்று அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.
01 ஒவ்வொரு ஹாஜியும் எடுத்துச் செல்லும் தொகைகள் பற்றி ஆய்வுகள் நடத்தப்படுமா ?..
02 இவ்வாறு எமது ஷரீஅத் கடமைப்படுத்திய ஒன்றை மற்றவர்களிடம் போய் கெஞ்சிப்பெற வேண்டிய நிலை வந்துவிடுமா ?...
03 எமது மூத்த அரசியல் வாதிகளின் நடைமுறைகளையோ, முன்னைய ஹஜ் முகவர்களின் வழிமுறைகளையோ பின்தொடராதவர்களை நாம் பின்தொடர்வதில் என்ன பயனுள்ளது என்பதை சமூகமே சிந்திப்பாயாக...
.jpg)
இந்த கட்டுரையாளர் சொல்கின்ற மூத்த அரசியல் வாதிகள், மூத்த முகவர்கள் முதலில் சமூகத்திலிருந்து தூக்கி வீசப்பட வேண்டியவர்கள். அவர்களால்தான் நம் சமூகத்துக்கு இவ்வளவு கேடு....
ReplyDeleteஇந்த மூத்த அரசியல் வாதி (பௌசி கும்பல்) செய்கின்ற பாதாள கோஷ்டி கொள்ளை வேலையை நியாயப்படுத்தப் பார்கின்றார் இந்த கட்டுரையாளர்.