Header Ads



இப்தாருக்கு அழைத்துவிட்டு வட்டியை பிரச்சாரம் செய்த வங்கி..!

(யு.எம் .இஸ்ஹாக்)

இப்தாருக்கு அழைத்து விட்டுவட்டி பிரசாரம் செய்யப்படுவதாக மக்களால் கூறப்படுகிறது. புனித ரமலான் மாதம் என்றால் எல்லோரும் முடிந்தளவு நன்மை செய்வதற்கே முயல்வர். இம்மாதத்தை  முஸ்லிம்கள் மிகவும் கண்ணியப்டுத்துவதை அனைவரும் அறிவர் .

நோன்பு நோற்பவர்களை  நன்மை கருதி, நோன்பு  திறக்க வைபதர்க்கு குடும்பத்தவர்கள், உறவினர்கள், தொழில்புரியும் நிலையங்கள், தேர்தல் காலங்களில் அரசியல் பிரமுகர்கள்  ஏற்பாடு செய்வது வழமையாகும் .

இவ்வாறானதொரு ஏற்பாடு  நேற்று 01.08.2013 கல்முனையில் உள்ள அரச வங்கியொன்றில்  (இப்தார்) நிகழ்வு நடைபெற்றது. இந்த நோன்பு திறக்கும் வைபவத்தில் எதிர்பார்த்த பலர்  சென்றிருக்கவில்லை 40 வீதமானவர்களே கலந்து கொண்டனர்.

எனினும் கலந்து கொண்ட சிலருக்கு இப்தார் நிகழ்வு கசப்பானதாக மாறியுள்ளது.  கல்முனையில்  உள்ள  அந்த வங்கியின் முகாமையாளர் ஒரு இஸ்லாமியர். இப்தாருக்கு வருகை தந்தவர்களிடம்  புதிய அடகு சேவை பற்றியும்  அதற்கான வட்டி பற்றியும்  முகாமயாளரால் அங்கு பேசப்பட்டது. இதனை  கேட்டு கொண்டிருந்த சிலர் அங்கு நோன்பு திறக்கவில்லை இருந்துவிட்டு  நேரம் தாழ்த்தி வீட்டுக்கு சென்றே நோன்பை திறந்துள்ளனர்.

வங்கிகளில் நோன்பு திறப்பதற்கு பயன்படுத்தப்படும் செலவுப் பணம்  வங்கி இலாபத்தில் பெறப்பட்டதா அல்லது வங்கி ஊழியர்கள் சேகரித்ததா? அப்படி என்றால் முஸ்லிம் ஊழியர்களுடயதா  என்பது தெளிவு படுத்தப்பட வேண்டும்.  வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள்  அழைக்கப்பட்டு இவ்வாறு நடை பெறுவதனால்  அங்கு இடம் பெரும் பாவத்துக்கு யார் பொறுப்பு கூறுவது  அரசியல் விடயங்களில் மூக்கு நுழைக்கும்  உலமாக்கள்  இந்த விடயங்களை பகிரங்கமாக மிம்பர்களில் கூற வேண்டும்..!

6 comments:

  1. இவர்கள் தாங்களை தாங்கள் ஏமாற்றி கொள்கிறார்கள். இறைவன் இவர்களுக்கு கெடுத்த அறிவையும் பொருளாதரத்தையும் கொஞ்சமாகவும் இஸ்லாத்தை படிப்பதற்காக செலவிடாதவர்கள் இவர்கள். நிச்சயமாக விசாரிக்கபடும் அந்த நாளை இவர்கள் பயந்து கொள்ளட்டும்.அறிவு பொருளாதரம் பற்றியும் விசாரிக்கபடும்.இனஸாஅல்லாஹ்.

    ReplyDelete
  2. வங்கி ஊழியர்கள் முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிம் அல்லாதவராக இருந்தாலும் அவர்களுக்கான ஊதியம் வங்கியின் இலாபமான வட்டியிலிருந்தே வழங்கப்படுகின்றது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்

    ReplyDelete
  3. வங்கியில் இப்தார் என்றாலே எப்படியும் அந்தப்பணம் கூடாத பணம் என்று தெரிந்தும் நம்மவர்கள் அங்கு சென்றது முதல் தவறு... எப்ப்டடியும் அப்பணம் வங்கி பணமாக இருந்தாலும் ஊழியர்களால் சேர்க்கப்பட்டதாக இருந்தாலும் அது வட்டியோடு சம்மந்தப்பட்டதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..

    ReplyDelete
  4. Spade ஐ Spade என்று சொல்ல அச்சப்படாதீர்கள். அரச வங்கியாகட்டும் ''இஸ்லாமிய'' என்ற அடைமொழிக்குள் அடங்கியிருக்கும் Profit Sharing என்ற அடிப்படையில் இன்று உலகில் இயங்கும் எந்த வங்கியாகட்டும் எல்லாமே வட்டியை அடிப்படையாக வைத்துத்தான் இயங்குகின்றன. அவற்றுக்கு ஹலால் ஃபத்வா கொடுத்தவர்கள் அல்லாஹ்வோடும் அல்லாஹ்வின் தூதரோடும் போர்ப் பிரகடனம் செய்திருக்கிறார்கள். அந்தப் போரில் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கு எதிரான அணியில் சேர்ந்து விடாமல் ஒவ்வொரு முஸ்லிமும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அல்லாஹ்விடம் அழுது கெஞ்சிக் கேட்டுக் கொள்ள வேண்டும். ஏனென்றால், நம்மை ஏற்கனவே வழிகேட்டுக்கு இட்டுச் சென்றிருக்கும் கூட்டம் மீள முடியாத நரகத்திற்கே இட்டுச் செல்லும். நவூதுபில்லாஹ்.

    ReplyDelete
  5. interest is haram.haram cannot be halal

    ReplyDelete
  6. முஃமின்களுக்கு அன்னியவர்களின் இப்தார்கள் சிறந்தது அல்ல

    ReplyDelete

Powered by Blogger.