குண்டர்களினால் தாக்கப்பட்ட பௌத்த தேரருடன் அமைச்சர் றிசாத் பேச்சு
பொதுபல சேனாவை விமர்சித்தமைக்காக குண்டர்களின் தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் பௌத்த தேரர் குறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் பொலிஸ் மா அதிபரை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.
மஹியங்கனை மஹவெளி ரஜமஹா விகாரை விகாராதிபதி வடரேக விஜித தேரர் இன்று 19-08-2013 பிற்பகல் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கையில் கேகாலை நகர் அருகில் வைத்து குண்டர்களின் தாக்குதலுக்கு உள்ளானார்.
இதுகுறித்து அமைச்சர் றிசாத் பதியுதின் பொலிஸ் மா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட பௌத்த தேரருடன் பேசியுள்ளார். இதன்போது தான் சுகம் அடைந்ததும், பொதுபல சேனாவின் அடாவடிககளை பகிரங்கப்படுத்தப் போவதாகவும், கொழும்புக்கு வந்து பொதுபுல சேனாவை ஒரு கை பார்ப்பதாகவும் அந்த தேரர் றிசாத் பதியுதீனிடம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அமைச்சர் றிசாத் குண்டர்களின் தாக்குதலுக்குள்ளான பௌத்த தேரர் இனவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர் எனவும், அவரின் பாதுகாப்பில் பொலிஸார் போதிய அவதானம் செலுத்த வேண்டுமெனவும் பொலிஸ்மா அதிபரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் மற்றுமொரு முஸ்லிம் அமைச்சர் ஒருவரும் குண்டர்களின் தாக்குதலுக்கு உள்ளான பௌத்த தேரருடன் தொலைபேசி மூலம் உரையாடியதாக அறியவருகிறது.

வெட்கம்!
ReplyDeleteஅந்த தேரர் அடிபட்டார்; அரசியல்வாதிகளான நீங்கள் சொகுசாக இருந்துகொண்டு சுகம் விசாரிக்கின்றீர்கள்!
நீங்கள் எப்போது உங்கள் பதவிகளைத் துறப்பீர்கள்?
ARASIYALWADIKALE ANTHA BAUDDA THERARUKKU WANTHA THAIRIYAM UNGALUKKU EPPO WARUM?.UNGALUKKU ROSHAM IRUNTHAL THANE
ReplyDelete