Header Ads



உலம் முழுவதும் வன்முறை அதிகரிக்க காரணம் - அமெரிக்காவின் அதிசய கண்டுபிடிப்பு

உலகம் முழுவதும் வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம், பருவநிலை மாற்றம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்செல் பர்கே தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகத்தில் வெப்பநிலை அல்லது மழை அளவு சிறிது மாறினாலும் தாக்குதல்கள், பாலியல் பலாத்காரங்கள், கொலைகள் ஆகியவை அதிகரிக்கிறது. உச்சபட்சமாக இரு குழுவினரிடையே மோதல்கள், நாடுகளிடையே போர் ஆகியவையும் கூட நடக்கிறது.

உலகம் முழுவதும் 60 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டு முடிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டு புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டு அவை இறுதியாக்கப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்துக்கும், பிரச்னைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவை பொருத்தவரையில் சமீபத்தில் வறட்சி ஏற்பட்டபோது, அங்கு தாக்குதல் சம்பவங்கள், பலாத்காரங்கள், கொலைகள் அதிகரித்தன. இதேபோன்று அமெரிக்காவிலும் நடந்தன. வெப்பநிலை அதிகரிக்கும்போது, மனித மனங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு, வன்முறைகள் ஏற்படுகின்றன என்று தெரியவந்துள்ளது. உதாரணமாக 2 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலை உயர்ந்தாலே தனிப்பட்ட குற்றங்கள் 15 சதவீதம் அதிகரிப்பதும், குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் 50 சதவீதம் வரை அதிகரிப்பதும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

6 comments:

  1. We can't accept it, it's not a reason, very lie and fault concept.

    ReplyDelete
  2. Amerikkavin nadawdkkaihalthan wanmuraikkukarananeyanri werillai

    ReplyDelete
  3. May be certain extend but the biggest culprit is USA

    ReplyDelete
  4. Weather has been changed only in Muslim counties or Muslim's areas what a funny .

    ReplyDelete
  5. பயங்கர கண்டுபிடிப்பு...அந்த விஞ்ஞானியோட கொங்சம் பேசனும் போல இருக்குது..
    can you send his contact number...!

    ReplyDelete
  6. அப்படிஎன்றால் இராக் மற்றும் ஆப்கனிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் போர் அமேரிக்கா தொடுப்பதற்கு இந்த பருவநிலை மாற்றம் தான் காரணமா,யாரின் காதில் அந்த யஹூதி பூசுத்துகிறான்

    ReplyDelete

Powered by Blogger.