Header Ads



றிஷாட் பதியுதீன் முதலிடம்

அண்மையில் நடைபெற்ற மாகாண மட்ட சமூக விஞ்ஞானப்போட்டியில் 11 இடங்களைப் பெற்று வட மாகாணத்தில் மன்/புத்/றிஷாட் பதியுதீன் ம.வி முதலாம் இடத்தைப்பெற்றுள்ளதாக பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.சீ.றியாஸ் தெரிவித்தார்.

இதற்கு முன் நடைபெற்ற வலய மட்டத்திலான போட்டியில் இப்பாடசாலை மொத்தம் 21 இடங்களில் 20 இடங்களைப்பெற்று முன்னணியில் திகழ்ந்தது.
கடந்த காலங்களில் இப்பாடசாலைக்கு தேசிய மட்டம் வரை பெருமைபெற்றுக்கொடுக்கக்கூடிய நிகழ்வாக சமூக விஞ்ஞானப்போட்டியே திகழ்கிறது.

கடந்த சில வருடங்களாக இப்போட்டிக்காக மாணவர்களை மிகவும் திறமையாக பயிற்றுவித்து, அதிக மாணவர்களை தேசிய மட்டத்தில் வெற்றி பெறச்செய்து, மன்னார் மாவட்டத்திற்கு பெருமை பெற்று கொடுத்தமைக்காக இப்பாடசாலையின் வரலாறு பாட ஆசிரியர் டீ.எம்.நப்ஹான், 2013 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியின் பிரதீபா பிரபா தேசிய விருதுக்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் கே.எம்.சியான் தெரிவித்தார்.


1 comment:

  1. IPPADASALAYYIN APARITAMAN INTA VETTIKK KARANAM ATIPAR MATTUM AASIRIYARKALIN TANNALAM ILLA ULAYYPPUM TOORA NOOKKUMEYAKUM.NABHAN PONTA AASIRIYARKAL INTAYA KALATTIN KATTAYAT TEWAIKAL.AWARUKKURIYA GOWRAWAMUM PARATTU URIYA MURAYYIL KIDAIPPATATKU IFTHARUDAYYA IWWELAYYIL IRAIWANIDAM PIERARTIKKIREN. UOORR PILLAYYAYI UOOTTI WALARTTAL TAN PILLAI TAANAI WALARUM EANPARKAL.EAMATU MAANBUMIKU AMACHCHAR RISHAD AWARKAL INAM MATAM NILAM KADANTU KALVI & KALACHCHRA WALARCHCHIKKU PADU PADUKIRAR.ATN PALANTAN AWRIN UOOR PADASALAYYIN INTA WALARCHCHI..PADASALAI ATIPER TAKUTI ARINTU URIYAWARKALUKKU ATIKARAMUM SEYAT APTTU SUTANTIRAMUM WALNGKUWATUM IWWETTIYIN PIRATANA KARANAMAKA ADAYALAP PADUTTALAM.

    ReplyDelete

Powered by Blogger.