வடமாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் பிரதி நிதித்துவம்கள் கேள்விக் குறி?
(சத்தார் எம்.ஜாவித்)
தமிழ் பேசும் மக்கள் அதிகமாக காணப்படும் மாவட்டம் என்ற வகையில் முதலிடம் பெறும் ஒரு மாவட்டமாக வடமாகாணம் காணப்படுகின்றது எனினும் இங்கு தமிழ் மக்களுக்கு அடுத்ததாக முஸ்லிம் மக்கள் காணப்பட்ட போதிலும் தேர்தல் என்ற ஒன்று வரும்போது இம்மக்களின் பிரதி நிதித்துவம் என்ற விடயத்தில் கேள்விக்கறியான ஒன்றாகவே காணப்படுகின்றது.
இதற்குக்காரணம் முஸ்லிம்களுக்கு என்று ஒரு திடமான கட்சியோ அல்லது அமைப்போ இல்லாததாகும். அரசியல் என்ற கண்ணோட்டத்தில் இன்று முஸ்லிம் சமுகத்திற்குள் பல போட்டா போட்டிகளும் கருத்து முறண்பாடுகளும் காணப்படுவதால் தேர்தல்களில் வெற்றி என்பது நிர்ணயிக்க முடியாத ஒன்றாகவே நோக்கப்படுகின்றது.
இன்று வடமாகாண தமிழ் சமுகம் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துவிட்டனர் என்பதனை அவர்களின் தலைமைகள் எடுத்துள்ள முடிவுகள் தற்போது புலப்படுத்துகின்றதுடன் அவர்கள் பாரியதொரு வெற்றியை அடைவார்கள் என்பதும் உறதியாகவுள்ளது. ஆனால் முஸ்லிம் சமுகம் இன்னும் குழப்பத்திலும், தடுமாற்றத்திலும் காணப்படுவது வேதனைக்குரிய விடயமாகும்.
இவ்வாறானதொரு கட்டத்தில் வடமாகண சபைத்தேர்தலில் முஸ்லிம்கள் போட்டிபோடுவதால் வாக்குகள் சிதறி முஸ்லிம்களுக்கான பிரதி நிதித்துவங்கள் இழக்கப்படும் நிலைமைகளே அதிகம் காணப்படுகின்றது. இதனால் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்களக்கான பிரதி நிதித்துவம் நம்பகத்தைமையற்றதும் கேள்விக்குறியானதுமாக காணப்படுகின்றது என விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இதுவரை காலமும் முஸ்லிம் தலைமைகள் தமக்கள் கருத்து முறண்பாடுகளையும், விட்டுக் கொடுப்புக்களையும் கடைப்பிடிக்காததன் காரணமாக அரசியலில் கட்சி தாவும் அல்லது சுய நலத்திற்காகவும், சுகபோகங்களுக்காகவும் பெரும்பான்மை அரசியலில் இணைவதுமே அவர்கள் செய்த, செய்தவரும் கைங்கரியங்களாகும். இதனால் முஸ்லிம் அரசியல் சமுகம் பலவாறு பிரிந்த நிற்கின்ற நிலைமைகளே காணப்படுகின்றது.
இச்செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு வாக்குகளை தாரை வார்த்தவர்கள்தான் இதன் காரணமாக அவர்கள் சுகபோகங்களுடன் வாழ வாக்கு வழங்கியவர்கள் பிச்சை எடுக்கும் நிலையிலான வாழ்க்கை முறைமைகளே இன்று காணப்படுகின்றது.
இதுவரை காலமும் எந்தவொரு முஸ்லிம் அரசியல் வாதியும் திறந்த மனதுடன் மக்களுக்கு சேவையாற்றவில்லை என்ற கருத்தே இன்று மக்கள் மத்தியில் பரவலாக அதிகம் பேசப்படும் வார்த்தைகளாகும். தாம் தெரிவு செய்யப்பட்ட மறுகனமெ மக்களை மறந்துவிடும் அரசியல் கலாச்சாரம் இலங்கையில் வெகுவாகவே தோற்றம் பெற்றுள்ளது.
கடந்த பல வருடங்களுக்குப் பின் வடமாகாணம் காணப்போகும் தமது மண்ணுக்கான ஒரு தேர்தலாக வடமாகாண சபைத்தேர்தல் விளங்குவதால் இதுவரை காலமும் கலப்பு தேர்தல்களில் சுழன்ற மக்கள் தாய்மொழியில் ஆட்சி நடத்தக் கூடியதொரு தேர்தலாகவும், பெரும்பான்மை தன்மைகளுடன் போட்டிபோடக் கூடியதொரு தேர்லாகவே மேற்படித் தேர்தல் கணிக்கப்படுகின்றது.
இவ்வாறான ஒரு நிலைமைகளில் வடக்கில் பெரும்பான்மையாக காணப்படும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஆழமாக சிந்தித்து செயற்படவேண்டிதொரு தருணமாக விளங்குகின்றது.
இதிலும் முஸ்லிம்களும் முஸ்லிம் கட்சிகளும் மிக அவதானமாக காய் நகர்த்த வேண்டியதொரு தருணம் என்றே கூறலாம். கிடைத்த சந்தர்ப்பத்தை புத்தி சாதுர்யமாக பயன்படுத்தத் தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் பாரிய இடர்களுக்கும், பின்னடைவுகளுக்கும் முகம் கொடுக்கவேண்டிய நிலைமைகள் ஏற்படும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.
இதுவரை காலமும் முஸ்லிம் சமுகம் இந்த அரசியலில் எதனையுமே பெறுவதற்கான வழிகளை முஸ்லிம் அரசியல் தலைமைகள் செய்யவில்லை என்பதுடன் அன்மைக் காலமாக இஸ்லாத்திற்கு எதிராக பெரும்பான்மை இனவாதிகள் மேற் கொண்டுவரும் காடைத்தனங்களையும், அடாவடித்தனங்களையும் தட்டிக்கேட்கவோ அல்லது முன்னின்று எதிர்க்கவோ அல்லது எதிர்த்த சந்தர்ப்பங்களோ இல்லாத திராணி படைத்தவர்கள் என மக்கள் விசனம் தெரிவிக்கும் நிலையில் இனியும் இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலைப்பாட்டிலேயே முஸ்லிம் மக்கள் காணப்படுவதால் அம்மக்களின் வாக்குகள் சிதறாமல் வேறுதலைமைகளுக்கு கிடைக்காமல் இருப்பதற்கான அவசர வேலைத்திட்டம் ஒன்றே முஸ்லிம் சமுகத்தின் தேவையாகும்.
இதனை ஏற்படுத்தவதற்கு ஒரே வழி வறட்டுக் கௌரவங்களையும், சுயநலங்களையும். ஒருவருக்கொருவர் காட்டிக் கொடுக்கும் நிலைமைகளை விட்டுவிட்டும், கட்சி தாவும் தந்திரோபாயங்களையும் விட்டுவிட்டும் அவசரமாக ஒரு குடையின் கீழ் ஒற்றுமைப்படவேண்டிய தருணத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகளும், அரசியல் தலைமைகளும் காணப்படுகின்றனர்.
இந்த நடவடிக்கைகளை தற்போதுள்ள முஸ்லிம் தலைமைகளும், அரசியல்வாதிகளும், அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மேற்கொள்ளாது தமக்குக்கிடைத்த வற்றையும், அரசாங்கத்தின் உதவிகளையும் தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கி ஏமாற்றுவதை விடுத்து தாம் ஏனையவர்கலால் ஏமாற்றப்படப்போகின்றோம் என்ற நிலையை மனதில் நிலை நிறுத்தி மக்களின் ஆதரவைப் பெறவேண்டுமே தவிர இனியும் மக்களுக்கு பூச்சாண்டி விளையாட்டுக்களை காட்டி ஏமாற்றுவதில் இருந்து தவிர்ந்து கொள்வதே முஸ்லிம் தலைமைகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உள்ள தேவையாகும்.
கடந்த காலங்களில் இஸ்லாத்திற்கு எதிராக ஏற்பட்ட நிலைமைகளும் அதன் தாக்கங்களும் முஸ்லிம் சமுகத்திற்கு நல்ல படிப்பினைகளை காட்டித்தந்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் முஸ்லிம் சமதாயத்தின் ஒற்றுமை இன்மையேயாகும். நிச்சயமாக இம்முறை நடைபெற இருக்கம் மூன்று மாகாண சபைத் தேர்தல்களிலும் இஸ்லாத்திற்கு அண்மைக்காலமாக ஏற்படுத்தப்பட்டு வரும் துரோகங்களுக்கு நல்லதொரு பாடத்தை புகட்டும் தேர்தலாக அமையும் என்பதில் ஐயமில்லை.
எனவே முஸ்லிம்களின் இந்த இறுக்கமான நிலைமைகளை மேற்கொள்ளவிருக்கும் நிலையில் தற்போது அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் கையாலாகாத அரசியல்வாதிகள் மக்களின் மனங்களை மாற்றும் வழிகளைச் செய்துவிட வேண்டாமென சமயத்தைப் பாதுகாக்கும் முஸ்லிம் சமுகம் வேண்டுகோல் விடுக்கின்றனர்.
தமது சுய நலத்திற்காக இதுவரை காலமம் வாய்கட்டி கைகட்டி மண்டியி;ட்டு இஸ்லாத்தைப் பாதுகாக்க வக்கில்லாதவர்கள் நெஞ்சில் தையரியமுள்ளவர்களை அரசியலுக்குள் உள்வாங்க எத்தனிக்கும் மக்களுக்கு இடையூறு செய்யாமல் விலகிக் கொள்ளுமாறு மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
வடமாகாண சபைத் தேர்தல் நெருங்க நெருங்க பல அரசியல் வாதிகளுக்கு நிம்மதியற்ற நிலைமைகளை தோற்றுவிக்கும் தன்மைகளே தற்போது தோன்றியுள்ளது இதனைப் போக்க அவர்கள் மக்களுக்கு சலகைகள் செய்வதற்கும், அவர்களின் நலன்களை பாதுகாப்பதற்கும் தம்மையே அர்ப்பணித்தவர்கள்போல் அம்மக்கள் மத்தியில் திரியும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளதை அவதாணிக்கக் கூடியதாகவுள்ளது.
இந்த மரங்கொத்திகளின் நிலையில் இருந்து முஸ்லிம்கள் தம்மைப் பாதுகாப்பதே முக்கியமானதாகும். அற்ப சொற்ப ஆசைகளுக்கும் நலன்களுக்கும் இடம் கொடாது தமக்கான உறுதிமிக்க உறுப்பினர்களை தெரிவு செய்து கொள்வதே இன்றைய தேவைப்பாடாகும்.
முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் இனிவரும் காலங்களில் திடமாக சிந்தித்து செயற்பட வேண்டியதொரு நிலைக்கு தம்மை மாற்றிக் கொள்ளவேண்டும். குறிப்பாக இஸ்லாமியர்கள் என்றவகையில் இஸ்லாத்தை பாதுகாக்கவேண்டும் அதற்கு உரிய வாறான செயற்றிட்டங்களை புத்தி ஜீவிகளுடன் இணைந்து செய்யவேண்டும் அதன் மூலம் ஏமாற்று அரசியல் வாதிகளிடமிருந்து இஸ்லாத்தைப் பாதுகாக்கலாம்.
இந்தவகையில் முஸ்லிம்களைப் பொருத்தவரை இனிவரும் காலங்களில் தேர்தல்கள் வரும்போது இஸ்லாத்தைப் பாதுகாத்தல் என்பதே தொணிப் பொருளாக அமையவேண்டும் என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
இதனை அடிப்படையாக வைத்து தேர்தல் களத்தில் இறங்கும் அரசியல் பிரமுகர்களுக்கே தமது வாக்குகளை வழங்க ஒவ்வொரு முஸ்லிம்களும் திடசங்கர்ப்பங் கொள்ளவேண்டும். அதன் மூலமே ஏமாற்று அரசியல் கலாச்சாரத்தில் இருந்து எம்மை நாம் பாதுகத்துக் கொள்ளலாம் என முஸ்லிம் சமுக ஆர்வளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம் வாக்காளர்கள் சரியான நேரத்தில் சரியான முறையில் தமது வாக்ககளை பயன்படுத்தப் பழகிக் கொள்வார்களானால் எதிர்காலத்தில் சுயநல அரசியல் வாதிகளிடமிருந்து சமுகம் பாதுகாப்புப் பெறும் என்பதில் ஐயமில்லை.
எனவே முஸ்லிம் சமுகம் கடந்த காலங்களைப்போல் செயற்படாது இலங்கை அரசியலில் சமய ரீதியாக தொடராக அனுபவித்து வரும் துன்பங்களையும், அநீதிகளையும், எதிர்ப்புக்களையும் சவாலாக ஏற்று இனவாதிகளுக்கும், ஏமாற்று அரசியல் வாதிகளுக்கும் பாடம் கற்பிக்கும் உறுதிபடைத்தவர்களாக மாறவேண்டயது காலத்தின் தேவையாகும்.

அப்போதும் இப்போதும் அதைத்தானே செய்கின்றனர் இவர்கள் மேடையில் ஏறும்போதே நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் என்ற கோசத்துடன் எல்லா முஸ்லிம் வேட்பாளர்களும் ஆரம்பிக்கின்றனர் இதில் வேறு ஹதிஸ்களையும் குரான் வசனகலும் இடைக்கிடையே தேவைக்கு ஏற்ப உப்பு போல சேர்க்கின்றனர்.ஏமாறும் எமது முஸ்லிம் காக்காமார் இருக்கும் வரைக்கும் அந்த ஏமாற்றும்( அரசியல்வாதி ) கூட்டத்துக்கு எல்லாமே வேருசுலபாம்.
ReplyDeleteஇதில் யார் இஸ்லாத்தை பாதுகாப்பான் எவன் முஸ்லிம்களுக்கு நல்லது செய்வன் என்று எவனை நம்புவது. வாய் திறந்தால் இவரைபோல் அவுலிய அல்லது மார்கவதி என்று இருக்கும் வெற்றி பெற்றதும் இவனைப்போல் ............(நோன்பு நோற்று உள்ளேன் அல்லாஹ் மன்னிப்பானாக).