நியூஸிலாந்து பால்மா பொருட்களில் பாக்டீரியா கிருமி
நியூஸிலாந்தின் மிகப் பெரிய பால்மா நிறுவனத்தின் குழந்தைப் பால் மா உள்ளிட்ட பொருட்களில் பாட்டுலிஸம் என்ற நோயைத் தரவல்ல பாக்டீரியா கிருமி கலந்திருக்கலாம் என அந்நாட்டின் அரசாங்கம் எச்சரித்துள்ளது.
பாட்டுலிஸம் என்பது சில நேரம் உயிரிழப்பையும் ஏற்படுத்தவல்ல ஒருவகை வாத நோய்.
நியூஸிலாந்திலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது தீவிர பரிசோதனைகளுக்கு அது உத்தரவிட்டுள்ளது.
அவுஸ்திரேலியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம், சௌதி அரேபியா உட்பட பல வெளிநாடுகளிலும் தமது வாடிக்கையாளர்களுக்கு தகவல் கொடுத்துள்ளதாக நியூஸிலாந்தின் முன்னணி பால் உற்பத்திப் பொருட்கள் நிறுவனமான ஃபோன்டெர்ரா கூறுகிறது.
சீனாவில் குழந்தைகள் பால்மா ஒன்றில் மெலமின் கலப்படம் ஏற்பட்டு 2008ல் பிள்ளைகள் 6 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவுக்கு சீன நுகர்வோர் மாறியிருந்தனர்.
நியூஸிலாந்திலிருந்து பால்மா இறக்குமதி செய்யும் நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment