Header Ads



பர்வேஸ் ரசூலுக்கு அநீதி இழைக்கப்பட்டதா..?

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காஷ்மீர் "ஆல்-ரவுண்டர்' பர்வேஸ் ரசூலுக்கு, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும், விளையாடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனையடுத்து, இத்தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட 15 இந்திய வீரர்களில் ஒரு போட்டியில் கூட விளையாடாத ஒரே வீரரானார்.

காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தனது "டுவிட்டர்' இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில்,"ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரசூலுக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கொடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. இதன்மூலம் அவரது நம்பிக்கையை அழித்துவிட்டனர்,' என, கூறினார்.

மத்திய அமைச்சர் சசி தரூர், தனது "டுவிட்டர்' இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில்," ஜடேஜா, ரெய்னாவுக்கு ஓய்வு அளித்து ரசூல், ரகானேவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். தொடரை வென்ற நிலையில், தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் வாய்ப்பு வழங்காததன் மூலம், இந்திய அணி 4-0 என முன்னிலை பெற்று என்ன பயன்,' என, தெரிவித்தார்.

காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் மீடியா கமிட்டி தலைவர் ரஞ்ஜீத் கர்லா கூறுகையில், ""ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் பர்வேஸ் ரசூலுக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு அளிக்காதது வருத்தம் அளிக்கிறது. இவர், சிறந்த "ஆல்-ரவுண்டர்' என்பதால், விரைவில் இந்தியாவுக்காக விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இருப்பினும் ஜிம்பாப்வே தொடரில் இடம் கிடைக்காதது மிகப் பெரிய இழப்பு. இந்திய அணி தொடரை வென்ற நிலையில் கடைசி இரண்டு போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தேன். இது, காஷ்மீர் முதல்வர் முதல் சாதாரண குடிமகன் வரை பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது,'' என்றார்.

No comments

Powered by Blogger.