மத்திய மாகாண தேர்தல் பிரச்சாரத்தில் ஐ.தே.க. முஸ்லிம் பிரமுகர்கள் பங்கேற்பார்களா..?
(எம். சுஐப்)
தேர்தலில் ஐ. தே. க. தனித்தே போட்டியிடுமென்ற கட்சியின் தீர்மானத்தை மீறி மத்திய மாகாணத்தில் அந்தக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரது பெயர் உள்வாங்கப்பட்டமை குறித்து கட்சியின் பல்வேறு மட்டங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அத்துடன் மத்திய மாகாண முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை சிதைக்கும் வகையில் ஆகக் கூடுதலான முஸ்லிம் வேட்பாளர்களை பட்டியலில் இடம் பெறச் செய்தமைக்காகவும் கட்சியின் மேல் மட்ட முஸ்லிம் தலைவர்கள் ஆட்சேபனை தெரிவித் துள்ளனர்.
ஐ. தே. க வின் உப தலைவர்களில் ஒருவரான கபீர் ஹாசிம் எம். பி. தலைமையில் இந்த எதேச்சையான நடவடிக்கையை எதிர்த்து தேர்தல் பிரசாரங்களிலிருந்து ஒதுங்குவதாக முடிவு செய்துள்ளார். கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஹலீம், கொழும்பு மாநகர மேயர் ஏ. ஜே. எம். முஸம்மில், மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் தலைவர் ரணிலை சந்தித்து நமது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளனர்.
கடந்த மாகாண சபைத் தேர்தலில் மத்திய மாகாணத்தில் 4 வேட்பாளர்களே இடம் பெற்றிருந்தனர். இம்முறை 7 பேர் இடம்பெற்றமை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாததெனத் தெரிவித்துள்ள அதிருப்தியாளர்கள் தனி நபரைத் திருப்திப்படுத்துவதற்காக சமூகமொன்றை பாழாக்க முடியாது எனத் தெரிவித்தனர்.

ஆசாத் சாலி இணைத்துக்கொள்ளப்பட்டமையையே இவர்கள் கண்டிக்கிறார்கள் போலும். பிரச்சினை என்று வரும் பொழுது புறமுதுகு காட்டி ஓடிய முள்ளந்தண்டில்லாத விலங்குகள், முஸ்லிம்களுக்காகப் பேசியமைக்காக பலவிதமான சவால்களை எதிர்கொண்ட வீரன் ஆசாத் சாலியை விமர்சிக்கின்றன.
ReplyDeleteஎன்னைப் பொறுத்த வரையில் ஆசாத் சாலி எந்தக் (மத்திய மாகாணத்தில்) கட்சியில் ஓட்டுக் கேட்கிறாரோ, அந்தக் கட்சிக்கே எனது வாக்கு. முதுகெலும்பில்லாத கோழை முஸ்லிம் வேட்பாளன் எவனுக்கும் நான் வாக்களிக்க மாட்டேன்.
மிகவும் முக்கியமான நல்ல கருத்து. இதுதான் பலம் என்று நினைக்கும் ரணிலின் பலகீனம். ஆனால் உங்கள் அதிருப்தி முஸ்லிம் வாக்காளர்களின் உற்சாகத்தையும் கட்சியின் வெற்றியையும் பாதிக்காமல் இருப்பது மிக மிக முக்கியம். என்பதே எனது தாழ்மையான கருத்து.
ReplyDeleteஅந்தத் தனிநபர்தான் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் பறிபோவதாகக் கூறி குரலெழுப்பியதோடு, மரணத்தின் விளிம்புக்கும் அரச தரப்பால் கொண்டு செல்லப்பட்டு மீண்டவர்.
ReplyDeleteபிடவைக்கு மேலால் செறிந்து கொள்ளும் அப்பாவித்தனமான முஸ்லிம் அரசியல்வாதிகள் பத்துப் பேரை விட பிடவையைத் தூக்கி சொறிச்சல் தீர சொறிந்து கொள்ளும் ஆஸாத் சாலி போன்ற ஒருவர் மத்திய மாகாண சபைக்குச் செல்வது முழுத் தேசத்தின் முஸ்லிம்களுக்கும் பயனுள்ளது.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
why asad sally want to contestest in unp ? he got own party ?
ReplyDeletehe can contest in NUA ?
ரணிலை விமர்சிக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளே ஒன்றை நினைவு கூருங்கள், முஸ்லிம் பள்ளி உடைப்பைக் கண்டித்து பாராளுமன்றத்தில் பேசி முஸ்லிம்களின் மத சுதந்திரம் காக்கப்பட வேண்டுமென்றவர் ரணில்தான்.
ReplyDeleteஇதில் தம் சமூகத்தின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்ட போது துணிந்து குரல் கொடுத்த அசாத் ஸாலியை ஐ.தே.க. வேட்பாளராக்கியதைக் குறை காண்பவர்களைக் கோழைகள் என்றுதான் கணக்கிலெடுக்க வேண்டியிருக்கும்.
அல்லாஹ்வுக்கு மட்டும் பயப்படுங்களப்பா!
இருக்கிற சொத்துப் போதாதென்று நினைக்கிறீர்கள் போலும். உணவளிப்பவன் அல்லாஹ்தான். அதைத் தடுக்க எந்த படைக்கப்பட்டவனாலும் முடியாது.
ஈமானை உறுதியாக்கிக் கொண்டால் முஸ்லிம் அரசியல்வாதிகள் தேறுவார்கள். இல்லையென்றால் அல்லாஹ் நிச்சயமாக ஒரு நாள் பிடிப்பான்.
asath is better then u my vote for Mr asath salih i am mahboob
ReplyDeleteஉண்மை எப்பொழுதும் கசக்கும்.அந்த வகையில் ஆசாத்சாலி better than other muslim politician.good luck aasath sali
ReplyDelete