முஸ்லிம்களின் சமய நிறம் பச்சை, எனவே பலர் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கின்றனர்
முஸ்லிம்கள் பெருவாரியான மக்கள் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள். இவர்களின் சமயத்தினுடைய நிறம் பச்சையாகும் ஐக்கிய தேசிய கட்சியின் நிறம் பச்சையாகும் ஆதலால் அநேகமானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கின்றனர். இப்போது ஐக்கிய தேசியக் கட்சி ஒன்று இல்லை. அது ரனில் விக்கிரமசிங்க கட்சி. அன்றுதான் ஐக்கிய தேசியக் கட்சி என ஒன்று இருந்தது. இப்போது அந்தக் கட்சி இல்லை. அந்தக் கட்சி ஆட்சிக்கு வருதானால் இன்னும் 10 அல்லது 15 வருடங்கள் செல்லும். அந்தக் கட்சியில் இருப்பது எந்தப் பிரயோசனமும் இல்லை. எப்போது சந்தர்ப்பம் வரும் என காத்திருந்த போதே எனக்கு அந்த இடைவெளி கிடைத்தது அதிலிருந்து நான் வெளியிறங்கி வந்துள்ளேன். ஐக்கிய தேசியக் கட்சியில் யானைச் சின்னத்தில் போட்யிட்டு வெற்றிபெற்றியைப் பெற்றுக் கொண்டு உங்களை ஏமாற்றி விட்டு கட்சி தாவும் பழக்கம் என்னிடமில்லை. உங்கள் வாக்குகளைப் பெற்று அந்தக் கட்சியில் சேர்ந்து உங்களுடைய பிரநிதியாகவும் உங்கள் சேவனாகவும் இருப்பதையே நான் விரும்புகின்றேன் என வடமேல் மாகாண சபையின் குருநாகல் மாவட்ட முதன்மை வேட்பாளர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.
மாவத்தகம தேர்தல் தொகுதியில் பறகஹதெனியப் பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளர் தயாசிரி ஜயசேகரவின் கிளைக்காரியாலயம் திறப்பு விழா 14-08-2013 புதன் கிழமை வைபவம் மாவத்தகம பிரதேச சபை உறுப்பினர் யாசிம் சேர் தலைமையில் நடைபெற்றது. வடமேல் மாகாண சபையின் குருநாகல் மாவட்ட முதன்மை வேட்பாளர் தயாசிரி ஜயசேகர அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் குருநகால் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நெரஞ்சன் விக்கிரமசிங்க ,வடமேல் மாகாண சபைக்காக போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களான அப்துல் சத்தார், சனத் மீகொல்ல் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
.jpg)
there is no specific color for religious (Islam) of Allah (SWT)
ReplyDeleteYOU HAVE GOT A WRONG INFORMATION FROM MR ASWER
ReplyDeleteNo green or any other colour is Muslims colour
ReplyDeleteSantharpam parthuk kondirunda santharpawaaaathi...!
ReplyDelete