Header Ads



அரசியல்வாதிகள் பலர் தமது வயிற்றுப் பிழைப்பிற்காகவே அரசியல் நடத்துகின்றனர்' ராஜித

நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் பலர் மக்களுக்கு சேவையற்றும் நோக்கினை விடுத்து தமது வயிற்றுப் பிழைப்பிற்காகவே அரசியல் நடத்தி வருகின்றனர் என அமைச்சர் ராஜித சேனாரட்ன குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே நாட்டில் தற்போதுள்ள மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் செய்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

தம்புள்ள பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல்வாதிகள் பலர் தங்களுடைய வயிற்றுப் பிழைப்பிற்காகவே அரசியல் நடாத்துகின்றனர். அரசியல் என்பது இரண்டு பக்கங்களும் வெட்டக் கூடிய ஓர் ஆயுதமாகும். அதனைக் கொண்டு நல்லதும் செய்யலாம், கெட்டதும் செய்யலாம். 

 மேலும் குட்டையான ஆடையணிந்த மாணவிக்கு தண்டனை வழங்கிய ஆசிரியையினை  தண்டித்த அரசியல்வாதிகளை மக்களே அரசியலுக்கு கொண்டு வந்தனர். அவ்வாறு செய்த ஆசிரியை மண்டியிடச் செய்யாது, மாணவியின் தாயாரையே மண்டியிடச் செய்திருக்க வேண்டும்.

அத்துடன் பணத்திற்காக கொலை செய்யும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களும் நாட்டில் இருக்கின்றார்கள். இதற்கும் மேலாக சில அரசில்வாதிகளின் வருமான விபரங்கள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடமே காணப்படுகின்றது.

இதனால் வருமான வரித் திணைக்களத்தினாலும் அவர்களது வருமான விபரங்களை வெளியிட முடிவதில்லை. எவ்வாறாயினும் நாட்டில் இன ஐக்கியத்தை கட்டியெழுப்ப அனைத்து இன மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும்  ராஜித சேனாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. உண்மையே கூறினீர்கள், இது எங்களது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு மிக பொருத்தம்.

    ReplyDelete
  2. வடக்கு, வட மத்திய, மத்திய மாகாண வாக்காளப் பெருமக்களே..!

    அரசாங்க அமைச்சரே சாட்சியம் அளிக்கின்றார். இனியாவது வயிற்றுப் பிழைப்பும், குடும்ப வளர்ப்பும் செய்யும் முஸ்லிம் அரசியல்வாதிகள் விடயத்தில் நீங்கள் விழிப்பாக இருங்கள்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. your absolutely correct its well suitable for Raufhakkeem and other Muslims politician their rubbish politician

    ReplyDelete

Powered by Blogger.