பௌத்த தீவிரவாதத்திற்கெதிராக முஸ்லிம் அரசியல்வாதிகளினால் தனித்து எதுவும் செய்ய முடியாது'
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
இன்றுநாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக முடிக்கி விடப்பட்டுள்ள அடாவடித்தனங்களுக்கெதிராகவும். பௌத்த தீவிரவாதத்திற்கெதிராகவும் முஸ்லிம் அமைச்சர்களாலும் அரசியல்வாதிகளாலும் தனித்து எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மெஸ்றோ நிறுவனத்தின் ஸ்தாபகத்தலைவரும் திகாமடுல்ல மவட்ட பாராளுமன்ற உருப்பினருமான எச்.உம்.எம்.ஹரீஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
மெஸ்றோ நிறுவனத்தின் 19ஆவது வருடாந்த மாநாடு நேற்று 2013.08.11 சாய்ந்நமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் நிறுவனத்தின் பொதுச்செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.ஆர்.ஏ.சுல்பி தலைமையில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த நமாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது கூட கொழும்பில்முஸ்லிம்களுக்கு எதிராக பேரின கடும்போக்கு சக்திகளின் அடாவடித்தனங்கள் நடைபெறுவதாக அறிய முடிகின்றது. இது தொடர்ந்து கொண்டேயிருக்கும் நாட்டின் அரசியல் சூழ்நிலை இவ்வாறுதான் இனி இருக்கப்போகின்றது என்ற செய்தி எம்மை கவலை கொள்ளச்செய்துள்ளது. பேரின கடும்போக்கு சக்திகளின் வலைக்குள் இவ்வரசு சங்கமித்துவிட்டது. இது எதிர்காலத்தில் மிகப்பெரிய சவாலாகும்.இன்றுள்ள சழ்நிலையில் முஸ்லிம்களுக்கு எதிராக முடிக்கி விடப்பட்டுள்ள அடாவடித்தனங்களுக்கெதிராகவும்.பௌத்த தீவிரவாதத்திற்கெதிராகவும் முஸ்லிம் அமைச்சர்களாலும் அரசியல்வாதிகளாலும் தனித்து எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம் சமுகம் கருத்து முரண்பாடுகளை மறந்து உடனடியாக ஒன்றுபடவேண்டும்.முஸ்லிம் சமுகத்திலுள் புத்துஜீவிகள்.அறிஞர்கள் புலம்பெயர் முஸ்லிம்கள் இங்லாமிய இயக்கங்கள் சமூக சேவை நிறுவனங்கள்என பலதரப்பட்ட வர்களும் இணைந்து உடனடியாக அகிம்சைப்போராட்டத்தில் குதிக்க வேண்டும் இதற்கான தயார்படுத்தல்களை மெஸ்றோ நிறுவனம் உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் என புதிய நிருவாகிகளிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். இதுவரை காலமும் இந்நிறுவனத்தின் அரசியல் சாயம் பற்றி மக்களிடத்திலிருந்து வந்த அரசியல் கனதியைக்குறைப்பதற்காக இதன் தலைமைத்துவத்திலிருந்து நான் இராஜினாமாச் செய்துள்ளேன் நேற்று இடம் பெற்ற உயர்பீடக்கூட்டத்தில் மசூரா அடிப்படையில் புதிய தலைமைத்துவமும் புதிய நிர்வாகமும் தெரிவு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. நமது இருப்புக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இன்றைய சுழ்நிலையில் மெஸ்றோ நிறுவனம் காத்திரமான பங்களிப்பை சமூகத்திற்கு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது ஒரு சிறு பிள்ளைக்குக் கூடத் தெரிந்த விடயம். கடும் கஷ்டப்பட்டுக் கண்டு பிடிச்சு அசத்திட்டீங்க. நீங்க சிறந்ததொரு அரிவாளி. அமைச்சரா இருக்க வேண்டிய நீங்க வெறும் பாராளுமன்ற உறுப்பினராக மட்டுமே ஆகிட்டீங்க. ஏதோ, கல்முனை மக்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். ஆனால் நீங்களோ கொடுத்து வைத்தது மட்டுமல்ல ஒரு அதிஷ்டசாலியும் கூட ஏனென்றால் கல்முனை மக்கள் உங்களை எம்.பி. ஆக்கிட்டாங்களே.
ReplyDeleteappa ennathuku ................. irukeeenge arasaangathoda
ReplyDeleteSri lanka muslim madayrkal enpathaium kalmunai madayakal
ReplyDeleteMp Aavatharkkum Mastro Pavikkapaddathu
Minister aavathrkkum Eppo Pavikkienrilo..........?
==========Kalmunai Mohamed Fowse+++++++++++++
Hello Mr Harees do not corporate with Mahinda and his Katchi.
ReplyDeleteMr Kalideen
ReplyDeleteMinister Post.......................?
++++++++++Kalmunai Mohamed Fowse++++++++++
உண்மைதான் பௌத்த தீவிரவாதிகளின்
ReplyDeleteஅடக்குமுறைகளுக்கு எதிராக அமைச்சர்களினாலும் அரசியல்வாதிகலினாலும் தனித்து எதுவுமே செய்யமுடியாது என்பதை 19 வருட மெஸ்றோ
தலைவராக இருந்து கண்டுபிடித்ததும் ஒரு சாதனைதான்....வாழ்த்துக்கள்
Hello, What happen you..???? very funny...
ReplyDeleteWill you please shut your mouth up and respectfully step down from the position you hold unless you can do something useful to the Muslim community?.Have you done anything material to the Muslim community so far ??
ReplyDeleteWe all wasted our precious votes electing some useless nuts like you.We'll teach a good lesson to all those who have been quiet trying to secure the petty political gains next time.....
Tell us what did you do to the Muslim community yet?
ReplyDeleteஅப்ப ஏன் தேர்தல் வந்தா மட்டும் பெரிய வீரர்கள் போல் வீர வசனம் பேசுறிங்க. எந்தனை காலம்தான் ஏமார்வார்கள் இந்த மக்கள்
ReplyDelete