அல்லாஹ்விடம் ஆணையிட்டு கூறுகிறேன், புனித கஹ்பாவை அழிப்பதைவிட மோசமான குற்றச் செயல்
எகிப்தில் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை ஒடுக்கும் நடவடிக்கையின் முக்கிய கட்டமாக அதன் உயர்மட்ட தலைவர் மொஹமட் பஅதியை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். வடக்கு கெய்ரோவின் நஸ்ர் நகர குடியிருப்பு பகுதியில் வைத்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவரான 70 வயது மொஹமட் பஅதி கைது செய்யப்பட்டதாக எகிப்து அரச ஊடகம் செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் மொஹமட் பஅதி தோரா சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டதாக உள்துறை அமைச்சு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. தெற்கு கெய்ரோவில் இருக்கும் தோரா சிறைச்சாலையிலேயே மக்கள் எழுச்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மற்றும் அவரது அரசின் முக்கிய உறுப்பினர் சிறை வைக்கப்பட் டுள்ளனர்.
எகிப்தில் கடந்த ஜுலை 3 ஆம் திகதி இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சிக்கு பின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பெரும்பாலான தலைவர்கள் தற்போது சிறைவைக்கப்பட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்டிருக்கும் பஅதி முர்சி பதவி கவிழ்க்கப்பட்ட பின் ஒரு முறையே பொதுமக்கள் முன் தோன்றி இருந்தார். இதன் போது அவர் ரபா அல் அதவியாவில் இருந்த முர்சி ஆதரவு ஆர்ப்பாட்ட முகாமில் ஒருதடவை காட்சி அளித்தார். அதன்பின் அவர் தலைமறைவாகி இருந்தார்.
எனினும் முர்சி பதவி கவிழ்க்கப்பட்டதை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். கடந்த ஜுலை 25 ஆம் திகதி அவர் வெளியிட்ட கருத்தில், ‘’(இராணுவ தளபதி ஜெனரல் அப்தல் பத்தாஹ்)” அல் சிசி எகிப்துக்கு செய்தது, புனித கஹ்பாவை ஒவ்வொரு கல்லாக அகற்றி அழிப்பதைவிடவும் மோசமான குற்றச் செயலென்பதை இறைவனிடம் ஆணையிட்டு நான் கூறுகிறேன்” என்று தெரிவித்தார்.
.jpg)
பஅதி அல்ல பதீஃ ஜஃப்னா முஸ்லிமுக்கு ஏன் இந்த அவசரம்.செய்திகளை வெளியிடு முன் தலைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மீள பரிசீலித்து வெளியிடுக
ReplyDeleteIVAN MUSLIMA ENRDU SANDEGAM WARUGIRIDADHU PUNIDHA KAHBAVAI VIDA IVARGALAIM KOOTTAM PUNIDHAMANADHA
ReplyDelete