வெலிவேரிய தாக்குதல் குறித்து கோத்தா வாய்திறந்தார்
வெலிவேரிய கிராம மக்களை சிலர் தூண்டி விட்டதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தள்ளார். வெலிவேரிய கிராம மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு திருப்திகரமான தீர்வுத் திட்டம் வழங்கப்பட்டுள்ள நிலையில், போராட்டம் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேவையற்ற வகையில் மக்களை கிளர்ச்சியடையச் செய்து கலகம் விளைவிக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். ஏற்கனவெ குறித்த கைத்தொழிற்சாலையை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் மக்களை திசை திருப்பி கலகம் விளைவித்து அரசாங்கத்திற்கு அசௌகரியம் ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment