Header Ads



பயங்கரவாத புலிகளுடன் முஸ்லிம் அமைப்புக்கள் இணையுமா..?

இந்தியாவுக்குள் ஊடுருவ, பாகிஸ்தான் சக்திகள் சில, சிறிலங்காவை தளமாகப் பயன்படுத்தி வருவதாக, இந்தியாவின் உள்ளகப் புலனாய்வு அமைப்பான ஐ.பி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் ஐ.பி எச்சரித்துள்ளது. 

மேலும், லஷ்கர்-இ-தொய்பா, தெஹ்ரிக்-இ- தலிபான் மற்றும் விடுதலைப் புலிகளின் சக்திகள் இணைந்து கொள்ளக் கூடும் என்றும் ஐ.பி எச்சரித்துள்ளதாக, ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. 

எனினும், இதுபற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் இந்தியா உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என்.சிங் தெரிவித்துள்ளார். 

அதேவேளை, சிறிலங்கா பின்னணியைக் கொண்டுள்ள, இந்தியாவில் உள்ள தமிழ்த் தேசிய சக்திகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கும்படியும், ஐ.பி கேட்டுக் கொண்டுள்ளதாகவும் ரைம்ஸ் ஒவ் இந்தியா தெரிவித்துள்ளது.

2 comments:

  1. een arasudan inainthu sejalbadavillaiya

    ReplyDelete
  2. இப்படியே போனால் இது தான் நடக்கும்...!!!

    ReplyDelete

Powered by Blogger.