Header Ads



'எகிப்து புரட்சியை அழித்ததானது அரபு எழுச்சியின் முடிவாகும்' தவகுல் கர்மான்

(Tn) எகிப்தில் இஸ்லாமியவாத ஜனாதிபதி மொஹமட் முர்சி பதவி கவிழ்க்கப்பட்ட இராணுவ சதிப்புரட்சி அரபு உலகின் ஜனநாயக செயற்பாட் டுக்கான சாவுமணி என நோபல் விருது வென்ற யெமன் பெண்மணி தவகுல் கர்மான் குறிப்பிட்டுள்ளார்.

“எகிப்து வரலாற்றில் மற்றும் அரபு எழுச்சிக்கு பின்னர் பிராந்தியத்தில் ஏற்பட்ட முதல் ஜனநாயக செயற்பாடு மிக விரைவாக காணாமல் போய் விட்டது” என கர்மான் ராய்ட்டருக்கு தொலைபேசியூடாக அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

தனது ஜனநாயக பிரசாரத்திற்காக நோபல் விருதை வென்ற கர்மான், அந்த விருதை கைப்பற்றிய முதல் அரபு பெண் என்றும் இரண்டாவது முஸ்லிம் பெண் என்றும் வரலாற்றில் இடம்பிடித்தார். முர்சி ஆதரவு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வெளியிட்ட இவரை கடந்த ஓகஸ்ட் 4 ஆம் திகதி எகிப்துக்குள் நுழைய அந்நாட்டு நிர்வாகம் அனுமதி மறுத்தது. இவர் நாட்டுக்குள் நுழைய தடைசெய்யப்பட்டோரது பெயர் பட்டியலில் இருப்பவர் என எகிப்து நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது.

“என்னை நாட்டுக்குள் நுழைய அனுமதிக்காததன் மூலம் எகிப்தின் புதிய அரசு மீண்டும் கடந்த கால எதச்சதிகாரத்திற்கு திரும்புவது உறுதியாகிறது. இவர்கள் மாற்று கருத்துகளை சகித்துக்கொள்ள முடியாதவர்கள்” என்று கர்மான் விபரித்தார்.

முர்சியின் பதவி கவிழ்ப்பானது பிராந்தியத்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு எதிரானது என கர்மான் கூறியுள்ளார். “அரபு எழுச்சி ஜனநாயகத்தை கட்டியெழுப்பியது. ஒரு இராணுவ சதிப்புரட்சி என்பது அதற்கு எதிரிடையானது. அது அனைத்தையும் பலவீனப்படுத்திவிட்டது. எகிப்து புரட்சியை அழித்ததானது அரபு எழுச்சியின் முடிவாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.