Header Ads



மன்னார் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் ஒன்றியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் வைபவம்.


மன்னார் மாவட்ட அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடந்த ஒன்று கூடலும் புலமைப்பரிசில் வழங்கும் வைபவமும்.

அண்மையில் புத்தளம் அம்மார் வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்ற  புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக சட்டத்தரணியும் வட மாகாண சபையின் தேர்தல்  மன்னார் மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பாக போட்டியிடும் மில்ஹான் லத்தீப் கலந்து சிறப்பித்தார்.

 இந்நிகழ்வில் சிறப்புச் பேச்சாளராக அபிவிருத்திக் கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர். அஷ்ஷெய்க் ரவூப் ஷெய்ன் (நளீமி), முன்னால் தென் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஷக்கி அவர்களும்   இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கின்ற மன்னார் மாவட்டத்தைப் சேர்ந்த அனைத்து முஸ்லிம் மாணவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். 

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சட்டத்தரணி மில்ஹான் லத்தீப்  அவர்களால் புலமைப் பரிசில் வழங்கப்பட்டதோடு இவ்வாண்டுக்கான மன்னார் மாவட்ட அணைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் ஒன்றியத்தின் முக்கிய நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.


No comments

Powered by Blogger.