Header Ads



மலேசியாவில் நாய்களின் படத்துடன் ரம்ஸான் வாழ்த்து தெரிவித்த பெண் கைது

மலேசியாவில் நாய்களை பழக்கும் பயிற்சி நிலையம் நடத்தி வருபவர் மஸ்னா யூசப்(38). இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இந்த பெண் சமீபத்தில் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து ஒரு வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டார்.

நாய்களை குளிப்பாட்டுவது போன்றும் அவற்றுக்கு உணவு போடுவதும் போன்ற காட்சிகளின் பின்னணியில் தொழுகைக்காகன பாங்கோசை ஒலிக்க ரம்ஜான் வாழ்த்துகள் என்ற வாழ்த்து அட்டையுடன் அந்த வீடியோ முடிவடைகிறது.

மதத்தின் அடிப்படை நம்பிக்கைக்கு ஊறு விளைவித்ததாக அந்த பெண்ணை போலீசார் நேற்று கைது செய்தனர்.
  
இஸ்லாமிய மத வழக்கங்களின்படி, நாய்கள் அசுத்தமான பிராணிகளாக கருதப்படுகிறது. அவற்றை தொடுவது அசுத்தம் என கூறப்படுகிறது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட மஸ்னா யூசப்புக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

2 comments:

  1. IWALUKKU 5 YEAR SIRAI MATTUM POTATU.SIRAYYIL IRUKKUM KALAMELLAM NAAY BRIYANI KODUKKA EATPAADU SAYYANUM.APPATAN URUPPADUWA.

    ReplyDelete
  2. இது அதிகபட்ச தண்டனை.ஆனால் கண்டிப்பாக தண்டித்ததீரவேண்டும்.இவளுக்கு பின்னணியில் யார்உள்ளது என்பதை புலன்விசாரணை செய்யவேண்டும்.இரண்டாவது நாய் வீட்டில்வளர்பது மட்டுமே தடுக்கப்பட்டுள்ளது.வேட்டைக்காகவும். பாதுகாப்பிற்காக புறத்தோட்டத்தில் வளர்கலாம்

    ReplyDelete

Powered by Blogger.