சவூதி அரேபிய இளவரசரின் மாளிகை லண்டனில் விற்பனைக்கு வருகிறது
பிரிட்டனில், சவுதி இளவரசருக்குச் சொந்தமான பங்களா, (இந்திய மதிப்பு) 1,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. பிரிட்டனில், கோடீஸ்வரர்கள் வசிக்கும் தெருவில், சவுதி அரேபிய இளவரசருக்கு சொந்தமான பங்களா உள்ளது. இதை, இளவரசர் விற்கத் திட்டமிட்டு உள்ளார்.
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம், இந்திய தொழிலதிபர், லட்சுமி மித்தல் போன்ற கோடீஸ்வரர்கள் வசிக்கும் அந்த தெருவில், 1 சதுர அடி நிலத்தின் விலை, 5.5 லட்சம் ரூபாய். இந்நிலையில், அந்தத் தெருவில் நிலமோ, வீடோ வாங்க வேண்டுமெனில், உலகக் கோடீஸ்வர்களால் மட்டுமே முடியும். சவுதி இளவரசருக்குச் சொந்தமான இந்த பங்களாவில், விலை உயர்ந்த பொருட்களைக் கொண்டு, வேலைப்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
பங்களா முழுவதும், விலை உயர்ந்த பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன. கென்சிங்ஸ்டன் பேலஸ் பகுதியில் உள்ள, இந்த பங்களாவின் அருகில் தான், புருனே நாட்டு மன்னருக்குச் சொந்தமான பங்களாவும் உள்ளது. இந்த பங்களாவில், ஏராளமான அறைகளும், 5 தோட்டங்களும் உள்ளன. முதற்கட்டத் தகவல்களின் படி, இந்த பங்களாவின் விலை, 910 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஏராளமான கோடீஸ்வரர்கள் போட்டி போடும் நிலையில், 1,300 கோடி ரூபாய் வரை விலை போகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ITU EANNA PERYYYYA TOKAYA? ITAI WANGKA EATATKU KODEESWARAR? NAMMA NAATTU MUNCIBL MEMBERMAARE WANGKIDUWANGKALE....?
ReplyDeleteMay be one of our 'Royal Families' can easily buy it and add it as part of their foreign investiment!
ReplyDelete