எகிப்து இராணுவத்தின் கொடூரங்களுக்கு எதிராக இலங்கையிலிருந்து முதலாவது அறிக்கை
எகிப்து இராணுவத்தினால் மேற்கொள்கொள்ளப்படும் கொடூரமான அடக்குமுறையினை வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சட்டத்திற்கு எதிராக, ஜனநாயகமற்ற முறையில் வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி முஹம்மட் முர்ஸியின் ஆதரவாளர்கள் மீது எகிப்திய இராணுவத்தினர் மிகவும் கொடூரமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இரத்தம் சிந்தியுள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
யூத மற்றும் சில அரபு நாடுகளின் ஆதரவுடன் செயற்படும் எகிப்திய இராணுவத்தின் இந்த செயற்பாட்டினை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தெரிவித்துக்கொள்கின்றது´ என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்???????
ReplyDeleteIkhwanweb @Ikhwanweb 15 Aug
Update: 2600 Egyptians killed, +7000 injured as a result of horrific #Rabaa & #Nahda massacres Aug 14,2013 #RabaaMassacre #WeWillNeverForget