சாய்ந்தமருது சிவில் பாதுகாப்புக்குழு கூட்டம்
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
கல்முனைப்பொலிஸ் நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சாய்ந்தமருது சிவில் பாதுகாப்புக்குழு அங்கத்தவர்களுக்கான கூட்டமொன்று நேற்று 2013.08.28 நடைபெற்றது.
அல்ஹிலால் வித்தியாலயத்தில் கல்முனைப்பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி டி.சி.பி.இலங்ககோன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனைப்பொலிஸ் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னகோன் கலந்து கொண்டு சிவில் பாதிகாப்புக்குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளித்தார். இதில்சிவில் பாதுகாப்புக்குழு அங்கத்தவர்கள்,சமூக ஈசவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Post a Comment