முகமது ஆசிபின் சத்தியம்..!
லார்ட்ஸ் டெஸ்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மை தான்,' என, முதன் முறையாக பகிரங்கமாக ஒப்புக் கொண்டார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிப்.
கடந்த 2010ல் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில், "ஸ்பாட் பிக்சிங்' செய்த பாகிஸ்தான் அணியின் அப்போதைய கேப்டன் சல்மான் பட், வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகியோர் பிடிபட்டனர்.
இதற்கான சிறைத்தண்டனை பெற்ற இவர்களுக்கு, ஐ.சி.சி., சார்பில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 10, 7 மற்றும் 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து லாசேனில் உள்ள விளையாட்டு தீர்ப்பாயத்தில் சல்மான் பட், முகமது ஆசிப் செய்ய அப்பீல், ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இதனிடையே, சூதாட்டம் செய்தது உண்மை தான் என, முகமது ஆசிப் முதன் முறையாக ஒப்புக்கொண்டார். இதுகுறித்து ஆசிப் கூறியது,
எனது நடவடிக்கைகள் பாகிஸ்தானுக்கு மட்டுமன்றி, லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியது. இதை திரும்பிப் பார்க்கும் போது வருத்தமாக உள்ளது. எனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதற்காக ஐ.சி.சி., அளித்த தண்டனை சரியானது தான்.
எனது இந்தச் செயலால், நானும் எனது குடும்பமும் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டோம். எனது தடைக்காலம் முடிந்த பின், இழந்த பெருமையை சரிசெய்ய முயற்சிப்பேன், என, எனது தேசத்தின் சுதந்திர தினத்தில் சத்தியம் செய்கிறேன்.
போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும், எவ்வித ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல், அதிலிருந்து ஒதுங்கி இருங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். இதற்காக ஐ.சி.சி., ஊழல் தடுப்புக்குழுவுடன் இணைந்து ஒத்துழைக்க தயார். இவ்வாறு முகமது ஆசிப் கூறினார்.
.jpg)
test
ReplyDelete