Header Ads



அம்பாறையில் தடை செய்யப்பட்ட பால்மாக்கள் தொடர்ந்து விற்பனையில்..!

(யு.எல்.எம். றியாஸ்)

இரசாயன  பதார்த்தம் உள்ளதாக கூறப்படும் தடை செய்யப்பட்ட  நான்கு வகையான பால்மா வகைகள் சந்தைகளில் இருந்து முற்றாக அகற்றப்பட்டு விட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர்  சங்கத்தின் தலைவர் எம் இ ஜியு.ரோகன தெரிவித்திரிக்கும் அதேவேளை அம்பாறை மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளில் இரசாயன பதார்த்தம் உள்ளதாக கூறப்படும் தடை செய்யப்பட்ட  நான்கு வகையான பால்மா வகைகள் இன்னும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக நுகர்வோர் மத்தியில் பெரும் சந்தேகம்கள் எழத்தொடங்கியுள்ளன. காரணம் அரசாங்கம் மேற்குறிப்பிட்ட பால்மா வகைகளை விற்பனைக்கு தடை செய்துள்ள போதும்  இப்பல்மாவை வர்த்தகர்கள் இன்னும் விற்பனை செய்வதான விடயம் இப்பிரதேச மக்களை குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது .

குறித்த பால்மா வகைகளை  இம்மாவட்டத்தில் விற்பனை  செய்யும் வியாபாரிகளை இன்னும் கண்டு கொள்ளாமல் இருக்கும் அம்பாறை மாவட்ட பொதுச்சுகாதார பரிசோதகர்கள். இது தொடர்பான உத்தியோகத்தர்கள்  நிலை  குறித்து நுகர்வோர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

4 comments:

  1. As you are a PHI tell those names of Milk powders list t clear the customers as well.

    ReplyDelete
  2. Good for colombo bad for east. Don't u know this?

    ReplyDelete
  3. மக்கள் இவர்களின் அறிவித்தலை முழுமையாக நம்ப வில்லை !......... இதுதான் உண்மை .

    ReplyDelete
  4. This is not true Commission Problem

    ReplyDelete

Powered by Blogger.