Header Ads



'சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டியிலிருந்து வெளியேற நானே காரணம்"

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டியிலிருந்து வெளியேற நானே காரணம்" என்று பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் நகைச்சுவையாக கூறியுள்ளார்.

இதுகுறித்து சயீத் அஜ்மல் கூறியதாவது:

"கடந்த 2011ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் சச்சினை (85 ஓட்டங்கள்) நான் தான் வீழ்த்தினேன், அது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம். அதன் பின்பு 2012ம் ஆண்டு மார்ச் 18ம் திகதி நடந்த ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியிலும் அவரது விக்கெட்டை (52 ஓட்டங்கள்) நான் தான் கைப்பற்றினேன். ஒரு நாள் போட்டியில் இது தான் அவரது கடைசி ஆட்டமாகும்.

இந்த ஆட்டத்தில் அவர் தூஸ்ரா வகை பந்துவீச்சில் தடுமாறினார். உடனே அணித்தலைவர் மிஸ்பா உல்–ஹக் என்னிடம், அவரை ஸ்லிப்பில் கேட்ச் செய்து தூக்கி விடலாம் என்று கூறினார். இதையடுத்து யூனிஸ்கான், ஸ்லிப் களத்தடுப்புக்கு மாற்றப்பட்டார் எங்களது திட்டப்படியே அவர் ஸ்லிப்பில் விக்கெட்டை இழந்தார்.

இது போன்ற எனது சிறந்த பந்துவீச்சே அவரை ஒரு நாள் போட்டியில் இருந்து வெளியேற நிர்ப்பந்தப்படுத்தியது" என்று சயீத் அஜ்மல் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். Inne

1 comment:

  1. காகம் இருக்க பனம்பழம் விழுந்த மாதிரி.

    ReplyDelete

Powered by Blogger.