மதவாதத்துக்கு எதிரான அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் யோசனை தயாராகிறது
(Sfm) மதவாதத்துக்கு எதிரான அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் யோசனை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்படவுள்ளது
அமைச்சரவையின் அனுமதி கிடைத்ததும் இந்த யோசனை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அது அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே இந்த யோசனை முதல் தடவையில் அமைச்சரவை அனுமதியை பெற்றுள்ளது
இதனையடுத்து யோசனை தற்போது அமைச்சரவை உபகுழுவின் பரிசீலிப்பில் உள்ளது
இந்த நிலையில் மீண்டும் அமைச்சரவையின் இறுதி அனுமதி கிடைத்ததும் யோசனை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எந்த மதத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த யோசனை அமைச்சரவையின் கவனத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மதந் தொடர்பான சாசனந்தில் இந்த விடயம் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

Good work, well come.
ReplyDeleteivarukku salam podu
ReplyDelete