Header Ads



'கோத்தாபயகே யுத்தய' வெளியாகியது..! (படங்கள் இணைப்பு)

ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ச இல்லாதிருந்தால் தீவிரவாதத்துக்கு எதிரான போர் இருந்திருக்காது, பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச இல்லாதிருந்தால், வெற்றி சாத்தியமாகியிருக்காது என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க. 

கொழும்பில் நேற்றுமாலை 19-08-2013  இடம்பெற்ற சி.ஏ. சந்திரபிறேம எழுதிய, 'கோத்தாவின் போர்' என்ற ஆங்கில நூலின், சிங்கள மொழிபெயர்ப்பான 'கோத்தாபயகே யுத்தய' என்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ச தலைமையின் கீழும், கோத்தாபய ராஜபக்சவின் முயற்சியினாலும் தான் வெற்றி கிடைத்தது. 

கடந்தகாலத் தலைமைகள் பலவீனப்பட்டு, தோல்வியை சந்தித்த நிலையில் தான், சிறந்த தலைமைத்துவம் மூலம் கோத்தாபய ராஜபக்ச இதனை சாதித்துள்ளார் என்று இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

1990களில் பல்வேறு நாடுகள் மற்றும் வெளிப்புற சக்திகளின் தலையீடுகளால், போரின் போது ஏற்பட்ட நெருக்கடிகள் குறித்தும் இந்த நூல் விபரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த நிகழ்வில், நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச, படைத்தளபதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 

எனினும் மகிந்த ராஜபக்சவோ , அமைச்சர் பசில் ராஜபக்சவோ அல்லது அவர்களின் குடும்பத்தினரோ இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


3 comments:

  1. இவனுக்கெல்லாம் புத்தகம்? கொலைகாரனுக்கு!!

    ReplyDelete
  2. "கோத்தாபயகே கொல வெறி"

    ReplyDelete
  3. எய்தவன் இருக்க அம்பை நொந்த கதைதான்

    ReplyDelete

Powered by Blogger.