Header Ads



ஹக்கீம், பசீர் முறுகல் - அடுத்த கட்டம் என்ன..?

முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் பொது கூட்டமொன்றில் பகிரங்கமாக விமர்சித்திருக்கும் நிலையில் இதுபற்றிய பசீர்சேகுதாவூத்தின் பிரதிபலிப்புகளை அறிந்து கொள்வதாக ஜப்னா முஸ்லிம் இணையமானது பசீர் சேகுதாவூத்தின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு எடுத்தது. இருந்தபோதும் மணி ஒலித்ததே தவிர மறுபக்கத்தில் விடையளிக்கப்படவில்லை.

அதேவேளை 3 மாகாண சபைகளுக்குமான தேர்தல் முடிவடைந்தவுடன் பசீர் சேகுதாவூத் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கிய தீhமானமொன்றை மேற்கொள்ளுமென அக்கட்சியின் வட்டாரங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தன. 

அநேமாக கட்சி பசீர் சேகுதாவூத்திடம் கட்சி விளக்கம் கேட்குமெனவும், அதன்பின் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை இல்லையேல் அவரை கட்சியை விட்டு ஒதுங்கச்செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்படுமெனவும் அறியவருகிறது.

அதேவேளை ஒலுவில் துறைமுகத்தை ஆரம்பித்துவைக்கும் வைபவம் மிகவிரைவில் நடைபெறவுள்ளது. அதிலும் முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அறியவரும் நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் கிழக்குமாகாண முக்கியஸ்தர்கள் தமது ஆத்திரத்தை அரசாங்கம் மீது கொட்டித் தீர்ப்பதாகவும், அரசாங்கத்திற்கும் பசீர் சேகுதாவூத்திற்கும்  சமகாலத்தில் பாடம் கற்பிக்கப்பட வேண்டுமென வலியுறுததுவதாகவும் மேலும் அறியவருகிறது.

2 comments:

  1. namakullaye namaku turohihal irupathal tan naam innum todkadikkapduhinrom

    ReplyDelete
  2. இவர்கள் இருவருமே கட்சியை விட்டு தூக்கனும். அப்போதுதான் முஸ்லிம்களின் அரசியல் பயணம் சரியாக இருக்கும் என்பது எனது கருத்து.

    ReplyDelete

Powered by Blogger.