Header Ads



நாய்களுக்கு திருமணம் செய்வித்தமைக்கு வருத்தம் தெரிவிக்கும் பொலிஸ்

தமது மோப்ப நாய்களுக்கு கூட்டாக திருமணம் செய்து வைத்ததற்காக இலங்கை பொலிஸார் மன்னிப்பு கோரியுள்ளனர்.

இது குறித்து கண்டனம் வெளியிட்டுள்ள இலங்கை கலாச்சார அமைச்சு, புலன்விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. திங்களன்று 9 ஜோடி மோப்ப நாய்களுக்கு பௌத்த முறைப்படி இலங்கை பொலிஸார் திருமணம் செய்துவைத்தனர்.

மிருக வைத்தியர்கள், டாக்டர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த திருமணம் அதிகாரபூர்வமாக பதிவு செய்யவும் பட்டது. அலங்கரிக்கப்பட்ட பொலிஸ் ஜீப்களில் அந்த நாய்கள் தேன்நிலவுக்கு சென்றதை உள்ளூர் தொலைக்காட்சிகள் காண்பித்தன. இது குறித்த கடுமையான விமர்சனமும் எழுந்துள்ளது.

1 comment:

  1. இது வரை பௌத்தர்களின் திருமண முறையை கண்டிராதவர்கள் பார்த்துக் கொள்ளுங்கள், எடுத்ததுக்கெல்லாம் ஷரியா சட்டம் பற்றி கூப்பாடு போடும் BBS இதை பௌத்த சட்டம் என்பார்களோ தெரியாது

    ReplyDelete

Powered by Blogger.