Header Ads



பொதுபல சேனாவின் 'நாட்டைக் கட்டியெழுப்பும் புதிய தேசிய வேலைத் திட்டம்'

 (ஏ.எல்.ஜுனைதீன்)

  'இனப்பிரச்சினை தொடர்பில் தீர்வுத் திட்டம்' ஒன்றை பொதுபலசேனாவும்  எதிர்வரும் 25 ஆம் திகதி முன்வைக்கவுள்ளதாக அவ் அமைப்பின் நிறைவேற்றுக் குழு பிரதிநிதி திலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

  'நாட்டைக் கட்டியெழுப்பும் புதிய தேசிய வேலைத் திட்டம்' எனும் தலைப்பில் காலியில் இடம்பெறும் பொதுபலசேனாவின் மாநாட்டில் இத் திட்டம் முன் வைக்கப்படவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

  இத் திட்டம் முன் வைக்கப்பட்டது முதல் 6 மாத காலத்துக்கு மக்கள் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டதையடுத்து அரசிடம் இத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். இனப்பிரச்சினை தீர்வு விவகாரம் மற்றும் அடிப்படை வாதம், கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் முதலான துறைகளில் இடம்பெற்று வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து இத் திட்டத்தில் நாம் முக்கிய காரணங்களை முன் வைக்கவுள்ளோம்.

  இவ் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெறும் மாநாட்டில் மக்களுக்கு விரிவான விளக்கமளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. Welcome BBS It is correct path

    ReplyDelete
  2. Ha ha ha ... funny guy fundamentalism (அடிப்படைவாதம்)oru thuraiyam??...........

    ReplyDelete
  3. So It's mean no need any minister in Sri Lanka.
    Just BBS enough. very funny

    ReplyDelete
  4. So It's mean no need any minister in Sri Lanka.
    Just BBS enough. very funny

    ReplyDelete
  5. உங்களது நாட்டை கட்டி எழுப்பும் புதிய வேலை திட்டத்தில் எது இல்லாவிட்டாலும் மாடு அறுப்பு தடை முன்னுரிமை பெற்றிருக்கும்....அதனுடன் புத்த பெருமானின் மது ஒழிப்பு,சூதுஒழிப்பு கசினோ ஒழிப்பு என்பவற்றையும் சேர்த்து கொள்ளுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.