Header Ads



தலைப்பிறைக்குப் பின்னரான முஸ்லிம்களின் நிலை..!

(அபூ அரீஜ் பாஹிர் கபூரி)

கடந்த ஓரிரு தினங்களாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் விடயம் ஷவ்வால் தலைப் பிறை பற்றியதுதான். இன ஐக்கியத்துக்கும் ஒற்றுமைக்கும்  அடையாளமாகத் திகழும் பெருநாள் தினத்தை தீர்மானிக்கும் தலைப்பிறை விவகாரமே  பொறுப்பற்ற செயலினாலும் கரிசனையற்ற போக்கினாலும்  பல சர்ச்சைகளையும் குரோதங்களையும் தோற்றுவித்துள்ளதை நாம் அனைவரும் கவலையுடன் கவனிக்க வேண்டிய விடயமாகும்.

தலைப்பிறை பற்றிய காரசாரமான கருத்துகளும் வாதப் பிரதிவாதங்களும் எழுந்திருக்கும் நிலையில் இவ்விவகாரம் இலங்கையில் முஸ்லிம்களின் தற்போதைய அபாயகரமான சந்தர்பத்தில்  பாரிய தாக்கத்தை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.நம்மைப் பற்றிய செய்திகளை நாளுக்குநாள் எதிர்பார்த்திருப்பவர்களுக்கு பிறை விவகாரம் நிச்சயமாக நல்லதோர் விருந்தாக அமைந்திருக்கும்.

நம்மில் பலர்  அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவை தூற்றியும் சிலர் பிறைகண்டவர்களின் சாட்சிகளில் சந்தேகப்பட்டும் கருத்துக்களை வெளியிடுகின்றனர். வேறு சிலரிடம் கிழக்கு மாகாணத்திற்கென தனியானதொரு பிறைக் குழு அவசியம் என்றொரு கருத்தும் மிக வலுவாகவே    நிலவுகின்றது.ஏன் இந்தக் கருத்தினை ஓரிருவர் வெளிப்படையாகவே கூறியுமிருக்கின்றனர்.

முதலில் பிறையைக் கண்டு அறிவித்த இருபதிற்கும் மேற்பட்ட சகோதரர்களின் மனோநிலை அவர்களது சாட்சிகள் மறுக்கப்பட்டதன் பின் எப்படியிருக்கும் என்பதை நாம் உணர வேண்டும். அவர்களும் அல்லாஹ்வையும் நபியவர்களையும் ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் என்ற கோணத்தில்தான் இதனை நாம் அணுக வேண்டும்.ஒரு முஸ்லிம் பரிசுத்தமானவன்.அவன் சாட்சியும் அவ்வாறே.எவ்வித நியாயமுமின்றி அவன் கூறிய சாட்சியை சந்தேகப் படுவது இஸ்லாமிய வழியன்று. இன்று வரை பிறை கண்ட சகோதரர்களுடன் தொடர்பு கொண்டு முறையற்ற வார்த்தைகளால்  அவர்களுக்கு ஏசுவது மீண்டும் மீண்டும் அவர்களின் உள்ளங்களை காயப்படுத்துவதாகவே அமையும்.

சில இணையத் தளத்தினூடாக  பதிவேற்றப்பட்டிருக்கும் கிண்ணியாவில் பிறை கண்டவர்கள் மற்றும் கிண்ணியா உலமா சபை உறுப்பினர்களுடனான நேர்காணலில் அவர்கள் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார்கள், மனதளவில் தாக்கப்பட்டுள்ளார்கள் என்பது மிகத் தெளிவாகவே உணர்த்தப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டியதொரு விடயம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தன் கீழுள்ள கிண்ணியா கிளையின் உலமாக்களினால் ஊர்ஜிதப்படுத்தி முன் வைக்கப்பட்ட பிறை தொடர்பான சாட்சிகளை மறுத்ததானது அவ்வுலமாக்கள் மத்தியில் பெரும் மனவேதனையை உண்டாக்கியுள்ளது.

ஏற்கனவே நம் அரசியல் தலைமைத்துவங்கள் பாரிய பிளவுகள்,விரோதங்கள்,குரோதங்கள் மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நேரத்தில் நம் ஆன்மீகத் தலைமைத்துவமும் அதற்குக் கீழுள்ள வழிகாட்டிகளும் பிளவு படுவது இலங்கையில் நம்மிருப்பின் மீதான கேள்வியை மேலும் வலுவாக்கிவிடும்.

பிறை விவகாரம் தொடர்பில் ஜம்மியத்துல் உலமா தேசியத் தலைவர் அவர்களின் (வியாழன் 8/8/2013 பகல் 1 மணி) உரை மிக வலுவாகவே இருந்தது. ஜம்மியத்துல் உலமாவினூடாக தாம் செய்த மனிதநேய உதவிகளை சுட்டிக்காட்டியிருப்பது அவர் அன்று பேசிய விடயத்துடன் எள்ளளவும் சம்பந்தப்பட்டதல்ல. அதனால் நிச்சயமாக குறித்த கிண்ணியா மற்றும் மூதூர் மக்களின் அது போல் ஏனைய பிரதேச முஸ்லிம்களின் ஜம்மியத்துல் உலமா மீதான அவநம்பிக்கையை அதிகரித்திருக்கின்றதை இணையத் தளங்களில் வெளியாகும் கட்டுரைகளும் பின்னூட்டல்களும் உறுதிப் படுத்துகின்றன.

எம்மத்தியில் உள்ள கருத்து வேறுபாடுகளையும் பிரச்சினைகளையும் இஸ்லாம் என்றும் பற்றிப் பிடிக்கச் சொல்லும் ஒற்றுமையைக் குலைக்கும் காரணியாக ஆக்கிவிடக்கூடாது.இப்போது நாம் ஆராய வேண்டியது நாம் எந்த இயக்கத்தில்(ஜமாத்தே இஸ்லாமி,தவ்ஹீத், தப்லீக்,இஹ்வான்) இருக்கின்றோம் என்பதோ கடந்து போன ஷவ்வால் தலைப் பிறை தொடர்பான பிரச்சினை பற்றியோ அல்ல.  மாறாக நாம் அனைவரும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் என்ற வகையில் நம்மீதுள்ள தற்போதைய கடமைகளும் பொறுப்புகளும் என்ன என்பதுதான்.

எது எப்படியிருந்தாலும் பிறை கண்ட இருபதிற்கும் மேற்பட்ட சகோதரர்களின் சாட்சிகளின் அடிப்படையில் கண்ட பிறை கண்டதுதான். அதற்குப் பின்னாலுள்ள பிரச்சினைகளும் அரங்கேறிவிட்டன. அதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்காமல் தொடர்ந்தேறி வரும் பள்ளிவாயல்கள்,முஸ்லிம் வர்த்தக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள்,இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான விஷமக் கருத்துக்கள் குறிப்பாக கிரேன்ட்பாஸ் பள்ளி மீதான தாக்குதல் இவை போன்றவை நாம் ஒற்றுமைப் படத்தான் வேண்டும் என்பதை மிகத்துல்லியமாக எடுத்துக் கூறியிருக்கின்றன. அதன் மீதான எமது கவனத்தை அதிகரித்து நாம் அனைவரும் இயக்க மற்றும் கருத்து பேதங்களை மறந்து ஓரணியாய் நின்று தூர நோக்குடன் செயற்பட வேண்டும்

ஆனாலும்  மிகவும் கவனிக்கத்தக்கதொரு விடயம்  எதிர்காலத்தில்  பிறை விவகாரத்தில் இப்படியொரு பிளவு மீண்டும் தலை தூக்காமல் இருக்க காத்திரமான பல நடவடிக்கைகள் எடுக்கப்படல் இன்றியமையாததாகும். உதாரணமாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பல கிளைகள்  இலங்கையின் பல்வேறுபட்ட பிரதேசங்களில் இயங்குகின்றன. ஏதாவதொரு கிளை பிறை தென்பட்டதை விசாரித்து உறுதிப்படுத்தி கொழும்பு தலைமையகத்துக்கு அனுப்பினால் அதனடிப்படையில் முடிவுகளை வெளியிடும் முறையொன்றைக் கையாளலாம்.இல்லையென்றால் ஒவ்வொரு மாத ஆரம்பமும் குறிப்பாக நோன்பும் பெருநாளும் பிரச்சினையில் ஆரம்பித்து பிரச்சினையிலேயே முடிவுறும் என்பதில் ஐயமில்லை.

வல்ல அல்லாஹ் நம்மனைவர் நோன்பையும் ஏற்றுக் கொள்வானாக.அவனே அனைத்துக்கும் போதுமானவன்.

5 comments:

  1. Good article. Now whatever happened its now over. If ACJU did a mistake they will be responsible for the questions on the other hand if kinniya people did a mistake they will have to answer allah...anyway in future we should not have these kind of problem.ACJU must take a decision to over come these kind of issues in future.
    As Muslim ummah we have to be United and should not be divided among us.we have many problems from racist group. So please STOP COMMENTING each other and be a united ummah and find solutions for those problem first.
    Allah may protect our country and muslim from fithnas.

    ReplyDelete
  2. neegalum ulama safaiyai thittith theerkathane intha articala eluthineenga...

    ReplyDelete
  3. Good Effort Masa Allah go ahead,,,,,,,

    ReplyDelete
  4. சில கேள்விகள்
    1- வெற்றுக்கண்ணால் தான் பிறை பார்க்க வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம் ஒருவர் மூக்கு கண்ணாடி அணிந்த நிலையில் அல்லது துரம் பார்வைக்குள்ள கண்ணாடி அணிந்து பிறை கண்டால் மறுக்கலாமா?
    அல்லது ஒருவர் விமானத்தில் பிரயாணம் செய்யும் போது வெற்றுக் கண்ணால் பிறையை கண்டால் மறுப்பதா?
    2- வாணவியல் என்பது ஒரு கணிப்பு அதற்கு அரபியில் تخمين எனலாம்
    கண்ணால் பார்ப்பது உறுதியானது அதற்கு يقين என்று கூறலாம் முதலாவதை வைத்து இரண்டாவதை தட்டலாமா அதற்கு சட்டம் என்ன செல்கின்றது என்பதை நாம் விளங்கவேண்டும்

    ReplyDelete
  5. fahir gafoori awarhale neengal indha sandharpatthil mukkiyamana vidayatthai kooramal naluvi viduhireerhal ean?20 pear alla 60 pear thaan piray kandu adhatku poruppaha ullawarhalukku arivitthum awarhal eazo oru kaaranatthukkaha marutthu wittal islamiya nilaippadu enna?????kandawar enna seyya weandum?enyya muslimgal yaarudaya karuttai angeeharikka weandum?awarhal kandawarin karutthai eattru poruooaha ullawarhalukku maattramaha seyalpaduwaza?emazu salafuhal azu sambandhappatta hatheeskali waitthu enna peasuhirarhal enru parungal,uzaramah ibnu thaimiyyah rahimahullahvin fathawai parungal (2/460-464)innum صَوْمُكُمْ يَوْمَ تَصُومُونَ، وَفِطْرُكُمْ يَوْمَ تُفْطِرُونَ، وَأَضْحَاكُمْ يَوْمَ تُضَحُّونَ enra hadheesin virivurayai parungal.شكرا

    ReplyDelete

Powered by Blogger.