Header Ads



கொழும்பு தெற்கு துறைமுகத்தைப் பார்வையிட ஏராளமான பொது மக்கள்


(கொழும்பிலிருந்து ஏ.எல்.ஜுனைதீன்)

  கொழும்பு தெற்கு துறைமுகத்தைப் பார்வையிட ஏராளமான பொது மக்கள் முண்டியடித்துச் செல்கின்றனர். துறைமுக அதிகார சபையினால் துறைமுகத்திற்குள் சென்று வர பஸ் போக்குஇ வரத்து ஒழுங்குகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன.

  இன்று 2013.08.13 ஆம் திகதி 1.00 மணி வரை சுமார் முப்பது இலட்சம் பொது மக்கள் இத்துறைமுகத்தைப் பார்வையிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. இன்று 5.00 மணி வரை பொது மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

உலகில் இப்போதுள்ள மிகப் பெரிய கப்பல்களும் எதிர்காலத்தில் அமைக்கப்படும் பாரிய கப்பல்களும் இத் துறைமுகத்தில் பிரவேசிக்கக்கூடியதாக மிகப் பிரமாண்டமாக இத் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் உள்ளக நிர்மாண வேலைகள் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

கடலுக்குக்குள் அமைக்கப்பட்டுள்ள இத் துறைமுகத்திற்குள் பல கிலோ மீற்றர் உள்ளே சென்று எடுக்கப்பட்ட படங்கள் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. 


No comments

Powered by Blogger.