அம்பாரை மாவட்ட கரையோர பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு
(எஸ்.அஷ்ரப்கான் + ஆர்.நாஜி)
அம்பாரை மாவட்ட கரையோர பட்டதாரிகள் ஒன்றியம் எதிர்வரும் 21.08.2013
புதன்கிழமை அன்று அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கான அழைப்பினை விடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் மஹிந்த சிந்தனையின் கீழ் பட்டதாரிகளுக்கான நியமனம் என்ற அடிப்படையில் கடந்த 07.06.2012 அன்றிலிருந்து 06 மாத பயிற்சிக்காக பட்டதாரிப்பயிலுனர்களாக பிரதேச செயலகங்களில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு 14 மாதங்கள் தாண்டியும் நிரந்தர நியமனம் வழங்கப்படாது இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது.
இருப்பினும் அதே தினத்தில் திருக்கோவில், இறக்காமம், கல்முனை முஸ்லிம் பிரிவு, தமன, உஹண, அம்பாரை பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகங்களில் இணைக்கப்பட்ட சில பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டு 02 மாத முழுமையான சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் ஏனைய பட்டதாரிகளில் பெரும்பாலானோர் தற்போதுவரை ரூபா.10,000 கொடுப்பனவு மட்டுமே பெற்றுவருகின்றனர். இந்த விடயம் பாரபட்சத்தினை வெளிக்காட்டும் செயற்பாடாகும்.
அத்தோடு இக்கால கட்ட வாழ்க்கைச் செலவு சுமையினை சமாளிப்பது ஒரு
போராட்டமாக இருந்து வருகிறது.
எனவே இவ்வாறான இக்கட்டான நிலைக்கு முகங்கொடுத்துள்ள பட்டதாரிகள் தங்களது நிரந்தர நியமனம் வழங்கப்படுவதை துரிதப்படுத்துமாறு கோரி உரிய
அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை எதிர்வரும் 21.08.2013 புதன்கிழமை காலை 09.30 மணிக்கு தத்தமது பிரதேச செயலகங்களுக்கு முன்னால் நடாத்துவதற்கு ஒழுங்குகளை மேற்கொண்டு வருவதாக அம்பாரை மாவட்ட கரையோர பட்டதாரிகள் ஒன்றியம்

Post a Comment