Header Ads



'பொது பலசேனா'வுக்கு

     
            -இனியவன் இஸாறுதீன்-

என் காயங்களே வாய்களாக
கண்ணீர்த்துளிகளே வார்த்தைகளாக
வாதாடுகின்றன உங்களிடம் 

என்ன பார்க்கின்றீர் நீங்கள்
என்னைப் பார்க்கும்போது
என்ன காண்கிறீர்கள் என்னில்

உங்கள் விழிகளுக்கு அழகாகவும்
உங்கள்; ரசனைக்கு விருந்தாகவும்
உங்கள்; இச்சைக்கு ஆபாசப்பொருளாகவும் 
நான் இல்லாமலிருக்கலாம்

என்ன பார்க்கின்றீர்கள் என்னில்
உங்கள் பெண்களின் தேகம் பார்த்து
அலுத்துவிட்டதா உங்களுக்கு?

நானென்ன கூண்டுப் பறவையா?
அனாச்சாரத்திற்கு அடிபணிந்தவளா?
அநாகரீகத்தின் விளம்பரப் பாவையா?

நான் அந்நியத்தின் அடிமையாக
விலங்கிடப்பட்ட கைதியாக 
நிர்வாணம் விற்கும் நங்கையாக
விளங்குகிறேனா உங்களுக்கு?

எனக்கென்று ஓரு பெண்ணுரிமை
எனக்கென்று ஒரு சுயசிந்தனை
எனக்கென்று ஒரு சுயகவுரவம்
இல்லையென்கிறீர்களா நீங்கள்?

உணர்ந்து சொல்லுங்கள் 

உடை உடுத்தல்; நாகரீகமெனில்
உடை மறுத்தல் 
அநாகரீகமா? இல்லையா?

ஆடையில்லாதவன் 
அரை மனிதன் என்கிறார்களே 
ஆனால் ஏன் 
என் ஆடையைத் துறக்கச் சொல்கிறீர்கள் நீங்கள்?

இலைகுழை ஆடைகொண்டான் ஆதிமனிதன்   
இன்றைய மனிதனோ அரைகுறை கொண்டான்
அதனால்தானா நீங்கள் என்னை
உங்கள் அக்குள் காட்டும்; (அ)நாகரீகத்திற்கே 
திரும்பச் சொல்கிறீர்கள்? 

ஏன் என்னுடலுக்குள் 
உங்கள் கண்களை நுழைக்க முயல்கிறீர்கள்?
உங்கள் கண்களில் மனிதநேசம் எங்கே?
உங்கள் இதயத்தை ஏதாவது ஓர் 
அமிலம் எரித்துவிட்டதா?

முடி மறைப்பதென்ன மனித உரிமை மீறலா?
மூடி மறைப்பதென்ன மானுடத்தின் சாபக்கேடா?
ஒழுக்கமாய் நடப்பதென்ன தேசக்குற்றமா?

ஏன் இந்த உக்கிரம் 
ஏன் இந்த வக்கிரம்
உங்கள் மனசில்?

உங்கள் அறிவு 
உங்கள் ஆடைகளை விடவும் 
கசங்கிப் போனதா?
  
பொய் பலமெனப் புலம்புபவர்களே 
கௌதம புத்தரின் மனக்கண்ணாடி 
அணிந்துகொண்டு பார்த்தாலும் 
தெரியாது உங்களுக்கு 
பிரபஞ்ச ரகசியத்தை
பெண்மையில் கண்டறியும் மதிநுட்பம்

என் மார்க்க சட்டத்தை மதிக்கிறேன் நான்
என் மானுட சட்டத்தை நேசிக்கிறேன் நான் 
என் இறைமறைக்கு அடிபணிகிறேன் நான்
ஆணாதிக்கமும் ஆக்கிரமிப்புமில்லாமல் 
ஒழுக்கத்தால் என்னை ஆள்கிறேன் நான் 

என் தாயின் பெயரால்
என் மகளின் பெயரால்
என் சகோதரியின் பெயரால்
பிரான்ஸ் - ஜேர்மன் நீதிமன்றங்களில் கொல்லப்பட்ட
முஸ்லீம் பெண்களின் பெயரால்

ஒக்ஸ்போர்ட் வளாகத்திலும்
தேம்ஸ் நதிக்கரையிலும்  
ஈஃபெல் கோபுரத்திலும்
ஏன் எவரெஸ்ட் சிகரத்திலும் கூட

தங்கள் முழுஆடைக் கெதிரான அச்சத்தில் 
மவுனம் காக்கும்; மகளிரின் பெயரால்
என் இதயத்திலிருந்து வரும் பாடலை
நான் இனிப் பாடுவேன்

உனக்காக உரத்துப் பாடும் 
என் இதய பாடல் இதுதான் 

உண்மையில் நானே இறைவனை நேசிப்பவள்
என் மானம் காக்கும் மகளிர் அபயமே 'ஹிஜாப்'
தாய்மைக்காகச் சமைபவள் என்ற தத்துவத்தில்
முஸ்லீம்பெண் என்ற என் முகவரியே 'அபாயா'

1 comment:

  1. AWESOME LINES and HEADS OFF YOU........... Im very proud of u to say you are one of my uncle(sinnappa)

    ReplyDelete

Powered by Blogger.