Header Ads



கிழக்கு மாகாணத்தின் முதல் தாதி உத்தியோகத்தர் சுபைதீன் வபாத்தானார்

(மப்றூக்)

ஓய்வு பெற்ற தாதி உத்தியோகத்தரும், லங்கா மெடிக்கல் உரிமையாளரும், சமூக சேவையாளருமான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அல்லஹாஜ் எம்.ஏ. சுபைதீன் (ஜே.பி) 16-08-2013 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் தனது 68 ஆவது வயதில் வபாத்தானார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது தவிசாளரான ஏ.பி.எச். முஹம்மது அலியார் அக்கிராசனாரின் புதல்வாரன இவர் - பிரபல கல்விமான் மர்ஹும் சம்சுதீன் (பி.எஸ்.சி), பொத்துவில் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஹும் டொக்டர் ஜலால்தீன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் சாபிடீன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

கிழக்கு மாகாணத்தின் முதல் ஆண் தாதி உத்தியோகத்தரான சுபைதீன் அவர்கள், கலை மற்றும் மருந்தியல் விஞ்ஞான துறைகளில் பட்டதாரியாவார்.

சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட இவர்; - ஒரு சிறந்த கொடை வள்ளல். பல்வேறு துறைகளில் ஈடுபாடும் ஆழ்ந்த அறிவும் கொண்ட சுபைதீன் தீவிர வாசகராவார்.

சுபைதீன் அவர்கள் - ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகளுடன் நெருக்கமான உறவினைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. He is my friend and good man well educated person this news was so sad for me inshallah. Allah want to grant him jannathul firthause

    ReplyDelete

Powered by Blogger.