Header Ads



அல்லாஹ் என்று நான் சத்தமிட்டதும் என்வாயை வெள்ளைத்துணியால் பொத்தினர்

(மூதூர் முறாசில்)

திருகோணமலையில் நேற்று வியாழக்கிழமை காணாமற் போன அல்-ஹுதா அரபுக் கல்லூரி ஹிப்ழ் பிரிவு மாணவர் றபீக் அக்மல் (வயது:12) ஆட்கடத்தற் காரர்களினால் இன்று மாலை மூதூர் மணிக்கூட்டு கோபுர சந்திக்கு அண்மையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

நடந்த சம்பவம் பற்றி அக்மல் கூறும் போது,

நேற்று மாலை மூதூரிலிருந்து திருகோணமலைக்கு பஸ்ஸில் சென்ற நான், திருகோணமலை பஸ் நிலையம் முன்பாக பஸ்ஸை விட்டு இறங்கி அரபுக் கல்லூரி நோக்கி நடந்து சென்றேன்.
சிறிது தூரம் நடந்ததும் நீல நிற வேனில் என்னருகில் வந்தவர்கள் 'தம்பிஎன்று என்னைக் கூப்பிட்டவாறு திடீரென வேனில் தூக்கிப் போட்டார்கள்.

என்னைத் தூக்கி உள்ளே போட்டதும் கறுப்பு நிறத்தில் இறுக்கமாக ரிசேர்டரவுஸர் அணிந்த நான்கு பேர்கள் வரை அதனுள் இருந்ததைக் கண்டேன். அவர்கள் சிங்களத்தில் பேசியதும் எனக்குக் கேட்டது.

அப்போது அல்லாஹ் என்று நான் சத்தமிட்டதும் என்வாயை வெள்ளைத்துணியால் பொத்தினார்கள். அவ்வளவுதான் அதன் பிறகு எனக்கு என்ன நடந்ததென்று தெரியாது.

இன்று மாலை வாகனமொன்றிலிருந்து மூதூர் முச்சந்தியில் என்னை இறக்கிவிட்டதும் தடுமாறியவாறு நடந்து சென்றேன். அப்போது அதன் வழியாக வந்தவர்கள் என்னை   அழைத்து வந்தனர் என்றார்.

தெளிவாகப் பேசுவதற்குச் சிரமப்பட்ட நிலையில் காணப்பட்ட அக்மலின் கையில் ஊசியேற்றிய அடையாளமும் காலில் காயமொன்றும் இருப்பதை அவதானிக்க முடிந்தது.

1 comment:

  1. இது நிச்சயமாக ------

    1. சிறுநீரகத்தை எடுப்பதற்கான பரிசோதனை
    2. நோய்க் கிருமிகளை பரப்புதல்
    3.
    என்னால் கருத்துக் கூற முடியாமல் உள்ளம் தவிக்கின்றது

    ReplyDelete

Powered by Blogger.