சவூதி அரேபியா - ஜித்தா இலங்கை தூதுரகத்தில் நடக்கும் அநீதிகளும், அனாசாரங்களும்.
ஆதம்லெப்பே நயீம்,
சேர் ராசீக் பரீட் வீதி,(எல்டீஓ)
அட்டாளைசேனை.08,
இலங்கை.
25 ஜூலை 2013.
அதி மேதகு ஜனாதிபதி திரு.மகிந்த ராஜபக்ச,
இலங்கை ஜனனாயக சோசலிச குடியரசின் தலைவர்,
ஜனாதிபதி செயலகம்,
இலங்கை.
அதி மேதகு ஜனாதிபதி ராஜபக்ச அவர்களே
இது முற்றிலும் அதிமேதகு அரசர் அப்துல்லாஹ் இப்னு அப்துல் அஸீஸ் அவர்களினால் வழங்கப்பட்ட இற்றைவரை 120 நாட்களான கருணை காலத்தில் உரிய முறையில் ஆவணப்படுத்தப்படாத இலங்கை தொழிலாளர் மக்களால் சவூதி அரேபியாவில் ஜித்தாவில் எதிர் நோக்கப்படும் பிரச்சினைகள் ஆபத்துக்கள் அசௌகரியங்களைப்பற்றியது.
அதி மேதகு, தங்களின் தற்காலத்து வாழ்வாதார நிலையினை சரிப்படுத்திகொள்ள முடியாமல் எம் இலங்கை பிரஜைகளின் காட்டு வாழ்க்கையை ஊடகங்களிலும் கேள்விப்பட்டும் அறிந்தாற்போல், அங்கு இன்னும் ஆயிரக்கணக்கான எம்மவர் வீதிகளிலும் பாலத்திற்குக்கீழும் உண்ண உணவின்றி குடிக்க நீரின்றி மலசலத்திற்கான அடிப்படை வசதிகளின்றியும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சவூதி அரசினால் வழங்கப்பட்ட கருணை காலத்தின் ஆரம்பத்திலிருந்து இற்றைவரைக்கும் அந் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய தங்களது நிலைமையினை மாற்றிக்கொள்ள ஆகக்குறைந்த பட்சமாக தங்களது திரு நாட்டுக்கேனும் திரும்பி வர எம்மவர் அதற்குத்தேவையான ஆவணங்களை செய்துகொள்ள எங்களது நன்கு அதிகாரமளிக்கபட்ட இலங்கை தூதுவராலயத்தை அனுகியும் இற்றைவரை அங்கு எம்மவர் ஆயிரக்கணக்கில் முக்கியமான வேலைகள் முடியாதவர்களாக உள்ளார்கள்.
ஏனெனில், அங்கு எமது ஜித்தா தூதுவராலயத்தில் முதல் இலஞ்சம் கொடுப்பவருக்கே முதல் சேவை என பரிமாறப்படுகிறது. பேரம்பேசும் இலஞ்சத்தின் அளவுகளை கொண்டு இலங்கை வரிய தொழிலாலர்களுக்கும் தூதுவராலயத்தின் உத்தியோகத்தர்களுக்கும் இடையே பேசப்பட்ட தொலைபேசி பதிவுகளைக்கொண்டு இதனை எம்மால் நூறு வீதம் உண்மை என நிறுபிக்கமுடியும். தூதுவராலயத்தின் சாதாரண வாகன ஓட்டுனர் முதல் அதி உச்ச பதவியிலிருக்கும் பொறுப்புவாய்ந்த உத்தியோகத்தர் வரைக்கும் இலஞ்சம் பரிமாரப்படுகிறது என்பது மிகத்தெளிவு.
கொடுக்கப்படும் இலஞ்சத்தின் அளவு பாரம், நிறைவேற்றப்படும் ஆவணவேளைகளின் வேகத்தை தீர்மானிக்கிறது.சம்மதித்து கொடுக்கப்படும் இலஞ்சத்திற்கான வேலைகள் சிலவேளை மற்றவர் கொடுக்கும் கூடிய இலஞ்சத்தால் திடீரென பின்தள்ளப்படுகிறது. இதனால் இன்னும் ஆயிரக்கணக்கான எம் இலங்கை ஏழை தொழிலார்கள் இலஞ்சம் கொடுக்க வசதியின்றியும் இலஞ்சத்துடன் போட்டிபோட முடியாமலும் வீதிகளில் நடைபிணங்களாக தினமும் அலைந்து திரிகிறார்கள். ஒருத்தர் காலையில் நம்பிக்கையோடு தூதுவராலயத்திற்கு சென்றால் மீண்டும் நம்பிக்கை அற்றவராக வீடென்று இருக்கும் அவரது வீதிக்கு மாலையில் திரும்புகிறார். இது ஒரு நாளைக்கு நடக்கும் கூத்தல்ல,முடிவின்றி தினமும் இற்றைவரை நடக்கும் உண்மையான தெருக்கூத்து.
தன்னிடம் தேவையான முக்கிய ஆவணங்கள் இருந்தும் ஒரு விண்ணப்பதாரி தூதுவராலயத்தால் நிராகரிக்கப்படுவதற்கு இலஞ்சத்தை விட வேறு என்ன காரணம் இருக்க முடியும்? இலஞ்சம் கொடுக்க தவறும் பட்சத்தில் சட்டப்படி செல்லாத காரணங்களை சொல்லி ஒருத்தர் மாதக்கணக்கில் ஏமாற்றப்படுகிறார். துரதிஷ்டவசமாக இப்படி ஏமாற்றப்படும் நபர் பெண்ணாகவிருந்தால் அப்போது கொடுக்கப்படும் இலஞ்சம் பணமாகவன்றி பாலியல் சேஷ்டைகளாக துஷ்பிரயோகமாக மாறுகிறது. பணம்கொடுக்க முடியாத எம் ஏழைப்பெண்கள் வயது மதம் பாகுபாடின்றி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதனால் தான் நாட்டுக்கு எப்படியும் சென்றுவிட வேண்டும் என்பதற்காக அப்பாவி பெண்கள் அப்போது செய்ய வழியில்லாது உத்தியோகத்தர்களின் ஆசைக்கு கட்டுப்படுகிறார்கள்.
ஒரு அரபு நாட்டில் இப்படி நடக்கும் பாலியல் துஷ்பிரயோகங்களை கேள்விப்பட ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் இதுவும் நூறு வீதம் உண்மையானதும் தகுந்த சாட்சிகள் ஆயத்தமாகும் வேளையில் நிருபிக்கப்படக்கூடியதுமாகும். அங்கு வேலை செய்யும் இலங்கை அல்லாத வேறு நாட்டு வாடகை வண்டி ஓட்டுனர்களுக்கும் இலங்கை ஜித்தா தூதுவராலயம் இலஞ்சத்திற்காக பணமில்லாத வேளையில் இப்படி பாலியல் சேஷ்டைகளை தங்களின் பயனுக்காக எடுக்கிறார்கள் என்பது நன்கு தெரிந்த விடயம்.
பாலியல் சேஷ்டையில் கூட வினோதமான விடயம் என்னவெனில், யார் மிகக்கூடுதலான அழகிகளாக இருக்கிறார்களோ அவர்களுக்கே அதிலும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பிறப்பால் ஒரு பெண் அழகில்லை என்றால் அவள் அவர்களது தேவைக்கு தகுதியற்றவளாக ஆகி இவர்களுக்கு எப்படியும் இலஞ்சத்தைகொடுக்க வேண்டும் என்பதற்காக தனக்கு ஏற்கனவே தங்க பாதுகாப்பான தங்குமிடமுமில்லை என்பதால் விபச்சார தொழிலுக்கு ஆளாகி பணத்தை சம்பாதிக்கின்றாள்.
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் பெண்கள் தூதுவராலய உத்தியோகத்தர்களால் அவர்களது தனிப்பட்ட இருப்பிடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டாலும் அவ்வப்பொழுது சவுதி மக்களாலும் பொது மக்களாலும் தூதுவராலயத்திற்கு அருகிலுள்ள புனித பள்ளி வளாகத்திற்குல் பிடிபட்டிருக்கிறார்கள். இதனால்தான் அப்போது நான் அங்கிருக்கும் வேளயில் பள்ளி நிருவாகம் இந்த அசிங்கமான வேலை மூன்றாம் தடவையாக பிடிபட்ட பொழுது எமது தூதுவராலயத்தை வேறு ஒரு இடத்திற்கு மாற்றம் செய்யுமாறு வேண்டியிருக்கிறார்கள் ஆனால் தற்போதைய மாற்றப்பற்ற நிலைமை எனக்கு தெறியாது.
சவூதி அரசின் கணனியில் வேலை இயங்கும் வலை தளத்தில் விளையாடிக்கொண்டிரும்போது கையும் மெய்யுமாக ஒரு உத்தியோகத்தர் சவூதியால் பிடிபட்டார் என்பதனை இலஞ்சத்தின் வலு எந்தளவுக்கு என்பதனை சுட்டிக்காட்ட இதனை என்னால் இங்கு சொல்ல முடியும்.இதனால் இற்றைவரை திரு ஒசாமா எனும் அந்த உத்தியோகத்தர் தூதரகத்தின் அன்றாட செயற்பாடுகளிலிருந்தும் விளக்கி வைக்கப்பட்டார்.
இலங்கையிலிருந்து வந்த விஷேட உத்தியோகத்தர் திரு நியாஸ்(முன்னால் பிரதேச செயலாலரும் இன்னால் அரச முகவரும்) எமது தூதுவராலயத்தை தரிசித்தபொழுது அவர் செய்து முடித்த சில விண்ணப்பதாரிகளின் வேலைகளை தூதுவராலய உத்தியோகத்தர்களிடம் கையளித்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு சொல்லி திரு நியாஸ் அவரது குருகிய விஷேட சேவைக்காலம் முடிவுற்று இலங்கை புறப்பட்ட பொழுது அவரால் கொடுக்கப்பட்ட வேலைகளை அப்படியே புறந்தள்ளிவிட்டு தங்களுக்கு இலஞ்சம் கொடுத்த சகாக்களின் வேலைகளை முன்னுரிமைப்படுத்தியதையும் என்னால் இங்கு கூறமுடியும்.
அதி மேதகுவே, இப்படியான அனைத்து கெட்ட கொடுங்கோளான நிகழ்வுகளும் தாம் தூதுவராலய உத்தியோகத்தர்கள் துரித காலத்தில் பொருளாதாரத்தில் முன்னேரவேண்டும் என்ற பேராசையாலும் தன் தொழிலில் ஏற்பட்ட மந்த போக்கு அஜாக்கிரதை காரணமாகவுமே ஏற்பட்டது. இந்த அனீதிகளை ஏனென தூதுவராலய உத்தியோகத்தர்களிடம் நாங்கள் உரிய முறையில் ஆவணப்படுத்தப்படாத இலங்கை தொழிலாளர் மக்கள் விசாரித்தால் எங்களது கோவைகள் தகுந்த காரணமின்றி பின்தள்ளப்பட்டு அந்நாட்டு சட்ட திட்டதிற்கு ஒன்றித்து போகவில்லை என பொய்யான காரணங்களைக்கூறி எங்களையும் சவூதி அரச சிறைகளின் உள்ளே தள்ளிவிடுகிறார்கள்.
அதிமேதகுவே, பின்வரும் தூதுவராலய உத்தியோகத்தர்களால் நிர்ணயிக்கப்பட்ட இலஞ்ச விலைப்பட்டியலை தங்களின் மேலான கவனத்திற்கு சமர்ப்பிக்கிறேன்.
1) தட்காலிக கடவுச்சீட்டு ஒன்றைப் பெற்றுக்கொள்ள - 500.00 -700.00.சவூதி றியால்.
2) இகாமா இலக்கத்தை பதிய (சவூதி நாட்டின் அடையாள அட்டை) -200.00. சவூதி றியால்.
3) கைவிரல் அடையாளத்தை முன்னுரிமையில் பெற-1500.0 0. சவூதி றியால்.
4) கைவிரல் அடையாலத்தின் பின்னர் உரிய உத்தியோத்தரிடம் கடவுச்சீட்டை முன்னுரிமையில் ஒப்படைக்க- 300.00. சவூதி றியால்.
5) எல்லா வேளைகளையும் ஒரே தடவையில் விலைக்கழிவுடன் பெற- 2,500.00. சவூதி றியால்.
பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் சக/பிற முகவர்களுக்குறியது, அனைவருக்கும் தெரிந்தது.
1) +966 5638 40374
2) +966 5348 23147
3) +966 5631 29732
4) +966 5545 68348
5) +966 54300 6898
அதி சிறந்த பண்பாடுகளற்ற ஒழுக்கமற்ற எதெற்கெடுத்தாலும் சத்தம் போடுகின்ற இலஞ்ச ஊழல் தூதுவராலய அதிகாரிகளின் பெயர் விபரம் பின் வருமாறு-
1) திரு-ஒஸாமா
2) கண்ணாடியணியும் திரு -நியாஸ் அண்ணன்.
3) தூதுவராலய வாகன ஓட்டுணர் திரு- சரூக்
4) திரு-தாஜ்
அதிமேதகுவே, என்னால் இதுவரைக்கும் உங்களுக்கு சமர்பிக்கப்பட்டது வெறும் எழுதுக்களல்ல மாறாக எம் ஏழை இலங்கையர் சிந்திய இரத்தமும் கண்ணீர்த்துளிகளுமே. எங்களால் தங்களுக்கு சமர்பிக்க முடிந்தது இவைகள் மட்டுமே, தவிர தம் தாய் திரு நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தியை உண்டாக்கும் இப்படியான அசிங்கங்கெட்ட படிப்பறிவோ உலக அறிவோ இரக்க சுபாவமோ இல்லாத அநாகரிகமான இந்த உத்தமர்களை அதிக பட்ச தண்டனைகளைக்கொடுத்து சீர் திருத்துவது தங்களின் மேலான வல்லமை அதிகாரத்தைக்கொண்டே.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்னர், உலகில் இலங்கை சார்பாக நடாத்தப்பட்ட ஆய்வொன்றில் இலங்கை பொலிசே அதிக இலஞ்சம் பெறுவதில் முதலிடமாக தெறிவுசெய்யப்பட்டதை தாங்கள் மேதகு அறிவீர்கள். எம் தூதுவராலய உத்தியோகத்தர்களுக்கு எதிராக தக்க குற்றத்திற்கான எதிர் நடவடிக்கை எடுக்காவிடின் மேலுள்ள இந்த ஆய்வின் முடிவை உண்மையென நிருபித்துவிடும். இதனால்தான் இப்படியான நாட்டின் பொருளாதாரத்திற்கும் நற்பெயருக்கும் அபகீர்த்தியை உண்டுபண்ணும் வைரசுக்களை அழித்தொழிப்பது தங்களின் மேலான்மையைப்பொருத்ததாகும்.
பாதிக்கப்பட்டவனில் நானும் ஒருத்தன் என்ற வகையில் ஒரு நல்ல தீர்வு பழிக்குப்பலி இந்த துரோகிகளுக்கெதிராக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் எனது இந்த சிறிய ஒப்புதலை முடிக்கிறேன்.
அதிமேதகுவிற்கு நன்றியுடன்
நான்-ஆதம் லெப்பே நயீம்.
.jpg)
Iniyawadhu Saudi walaiku sellum ellarum welai sariyillatti paya wanam thirumbi wara muyatchi pannawum. Sallikkaga kastappadum makkalai thunburundhum nayigali Allah thahundha Thandanai kattayam valanguwan Ameen.Yaa Allah Ivargalai Nallpadiyaga nattuku war uthavi seivayaga Ameen.
ReplyDelete