பரீட்சை குளறுபடிகளை இரகசிய பொலிஸாருக்கு வழங்க ஜனாதிபதி உத்தரவு
பரீட்சைகளின் போது இடம்பெறுகின்ற குளறுபடிகள் மற்றும் அது தொடர்பான விமர்சனங்கள் குறித்த அனைத்து தகவல்களையும், இரகசிய காவற்துறையினருக்கு வழங்க ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ கல்வி அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கல்வி அமைச்சர் பந்துலகுணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் கடந்த தினம் ஜனாதிபதியை சந்தித்து தாம் விளக்கமளித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி தற்போது இது குறித்த சில தகவல்கள் இரகசிய காவற்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த சிக்கல் குறித்து இரகசிய காவற்துறையினரின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்வது உசிதமானதுஎன்று ஜனாதிபதி கருவதுவதாகவும் அமைச்சர் பந்துலகுணவர்தன தெரிவித்துள்ளார்.

Post a Comment