குருநாகல் மாவட்ட முஸ்லிமகள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை - தயாசிரி ஜயசேகர
(இக்பால் அலி)
குருநாகல் மாவட்ட முஸ்லிமகள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை, முஸ்லிம்களது உரிமைகளை மதித்து அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதுடன் அவர்களுக்கு எந்த தீங்கும் வராமல் முழுப் பாதுகாப்பை வழங்குவது என்னுடைய உறுதி மொழியுமாகும் என்று வடமேல் மாகாண சபையின் குருநாகல் மாவட்ட முதன்மை வேட்பாளர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.
மாவத்தகம தேர்தல் தொகுதியில் பறகஹதெனியப் பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளர் தயாசிரி ஜயசேகரவின் கிளைக்காரியாலயம் திறப்பு விழா 14-08-2013 புதன் கிழமை வைபவம் மாவத்தகம பிரதேச சபை உறுப்பினர் யாசிம் சேர் தலைமையில் நடைபெற்றது. வடமேல் மாகாண சபையின் குருநாகல் மாவட்ட முதன்மை வேட்பாளர் தயாசிரி ஜயசேகர அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
கிராண்பாஸ் நடந்த சம்பவத்திற்கு அரசாங்கம் முஸ்லிம்களுக்கு சார்பாக சலுகைகைள வழங்கி பழைய பள்ளியில் தொழுவதுற்குத் தேவையான வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதுடன் அங்கு தடையாக இருந்த அரச மரத்தை வெட்டி சீர் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜனநாயக நாட்டில் எல்லாயின மக்களுக்கும் உரித்தான சலுகைளும் உரிமைகளும் உண்டு. சர்வதேச சக்திகளின் சதிவலையில் சிக்குண்ட சில சக்திகளின் தீய செயற்பாடுகள் இலங்கையில் நற்பெயரைக் கெடுப்பதற்காக முனைந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதற்காக முஸ்லிம்சமூகம் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.
பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுடைய பிரச்சினைகள் தொடாபாக அவ்வப் போது முஸ்லிம்களுக்குச் சார்பாக குரல் கொடுத்துள்ளளேன் ஹலால், மற்றும் அபாயா தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தில் என்னுடைய ஓங்கி ஒலித்துள்ளது. எல்லாயின சமயத்தவர்கள் மத்தியிலும் அடிப்படைவாதிகள் உள்ளனர். சிங்கள . தமிழ் , முஸ்லிம் ஆகியவர்கள் மத்தியில் அடிப்படைவாதிகள் இருப்பதை நாங்கள் காண்கின்றோம். அதேபோல் அரசாங்கக் கட்சியிலும் ஒரு சில இனவாத கடும்போக்காளர்கள், உள்ளார்கள். இன்னும் சில கட்சிகளிலும் இந்த இனவாத கடும் போக்காளர்கள் உள்ளனர்.
என்னைப் பொறுவத்த வரையில் நான் முஸ்லிம் மக்களுடன் கடந்த காலங்களில் மிக நெருக்கமான உறவினைக் கொண்டவர். அவர்களுடை தனித்துவமாக சமய காலாசார விடயங்களை நான் நன்கு அறிந்து வவைத்திருக்கின்றேன்;. அந்த வகையில் நான் உங்களுடைய ஒருவர். இம் மாகாணத்தில் நான் முதல் அமைச்சராகத் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து வகையான வசதிகளையும் நான் செய்து தருவேன் என்பதை இங்கு உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன்.


நீங்க இதுவும் சொல்லுவீங்க இன்னமும் சொல்லுவீங்க சார். சர்வதேச சக்திகளின் சதிவலையில் சிக்குண்ட சில தீய சக்திகள் இலங்கையின் நற்பெயரைக் கெடுப்பதற்காக முனைந்து கொண்டிருக்கிறது, என்றால் ஏன் சார் அந்தத் தீய சக்திகளைச் சட்டத்தின் முன் கொண்டுவராமல் இதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு காலத்தைக் வீணாக்கிறீர்கள்?
ReplyDelete