புத்தர் தற்போது இருந்திருப்பாரானால் செவ்வாய் கிரகத்திற்கு போயிருப்பார்
(ஏ.எல்.ஜுனைதீன்)
புத்தபெருமானின் பெயரைச் சொல்லிக்கொண்டே ஆளுந்தரப்பு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றது. புத்தர் தற்போது இருந்திருப்பாரானால் அரசின் கொடுமைகளைச் சகிக்க முடியாது செவ்வாய் கோளுக்குப் போயிருப்பார் என நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு தெரிவித்துள்ளார்.
நவசமசமாஜக் கட்சியின் சார்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வதற்கு கொலையாளியே விசாரணைக் குழு நியமிப்பது வேடிக்கைக்குரிய செயலாகும். எத்தகைய ஏற்பாடுகள் இடம்பெற்றாலும் கொலையாளிகள் சொல்வதை நம்புவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஒன்றும் முட்டாள் அல்ல. காணாமல் போனோர் குறித்த ஜனாதிபதி விசாரணைக் குழு வெறும் கண்கட்டு வித்தையாகும்.
மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை திருப்திபடுத்துவதற்கு இங்கு தடல்புடலான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. திருகோணமலை மாணவர் படுகொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதும் இதற்காகவேயாகும் என்றும் கலாநிதி விக்கிரமபாகு சுட்டிக்காட்டியுள்ளார்.

true
ReplyDeletetrue
ReplyDeleteசிறு பாண்மை இவரை பாராளுனமண்றத்துக்குக்கூட அணுப்பவில்லையே ?
ReplyDelete