Header Ads



பெருநாள் பிறை விவகாரமும், ஞானசார தேரரும்..!

(Vi) பொது ­ப­ல­சே­னாவின் குரு­ணாகல் மாவட்ட மாநாடு, குரு­ணாகல் சத்­தி­ய­வாதி மைதா­னத்தில் நடை­பெற்­றது.  அங்கு உரை­யாற்­றிய  பொது­ப­ல­சேனாவின் செய­லாளர்  கல­கொட அத்தே ஞான­சார தேரர்,

சமா­தா­னத்தை விரும்பும் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்கள் எமக்கு ஆத­ரவை நல்­கு­கின்­றனர். அர­சி­யல்­வா­தி­களும் கடும் போக்­கா­ளர்­களும் சில ஊட­கங்­க­ளுடன் இணைந்து எம்மைத் தூற்றி வரு­கின்­றனர். சில அர­சி­யல்­வாதிகள் அரச சார்­பற்ற நிறு­வ­னங்களுடன் இணைந்து எமக்கு எதிராக சதி செய்கின்­றனர். கிறிஸ்­தவ முஸ்லிம் அமைப்புக்கள் எம்மை ஆத்திரமூட்டி வருகின்­றன. சிலர் எம்மை அர­சாங்கத்தின் அடி­வ­ரு­டிகள் என கூறி வரு­கின்­றனர். எப்­படி இருந்த போதிலும் எமது செயற்­பா­டு­களை தடுக்க முடி­யாது.

இலங்­கையில் இனி விகா­ரைகள், கோயில்கள், பள்­ளி­வா­சல்கள், தேவா­ல­யங்கள் புதி­தாக அமைக்­கப்­ப­ட­வேண்­டிய தேவை­யில்லை. இதற்­கான சட்­ட­மொன்றை ஜனா­தி­பதி கொண்டு வர வேண்டும்.

பெளத்­தர்­களின் தேவை­களை நிறை­வேற்ற இன்று ஒரு­வ­ரு­மில்லை. ஆனால் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு அனைத்­தையும் வழங்க பலரும் உள்­ளனர். முஸ்­லிம்­களால் எமக்கு ஏற்­பட்­டுள்ள இடர்கள் தொடர்­பாக அனைத்து பெளத்த அமைப்­புக்­களும் கலந்து உரை­யாடி அதற்கு எதி­ராக தீர்­மானம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும்.

பள்­ளி­வா­சல்­களில் முஸ்­லிம்கள் எமக்­கெ­தி­ராகப் பேசும் விட­யங்கள் வெளி­வரு­வ­தில்லை. பிக்­குகள் அர­சி­யல்­வா­தி­களின் பின்னால் செல்லத் தேவை­யில்லை. நாம் புத்­தரின் சீடர்­க­ளே­யன்றி ஏனை­ய­வர்­களின் சீடர்கள் அல்ல. 1948 இன் பின் பெளத்த அர­சி­யல்­வா­திகள் எம்மை ஏமாற்றி விட்­டனர். இலங்கை ஒரு சிங்­கள பெளத்த நாடு என்று கூறு­ப­வர்­க­ளுக்கே சிங்­க­ள­வர்கள் வாக்­க­ளிக்க வேண்டும். இலங்­கையில் போதை­வஸ்து பெருக்­கத்­திற்கு அர­சி­யல்­வாதிகள் காரணம். போதை­வஸ்து வியா­பா­ரி­களை அவர்­களே பாது­காக்­கின்­றனர்.

இலங்­கையில் இன்று தவ்ஹீத் ஜமாத்­தி­னரால் பிரச்­சி­னைகள் உரு­வாகிவரு­கின்­றன. மத்­திய கிழக்கு நாடு­களில் பிரச்­சி­னை­களைத் தோற்­று­வித்­துள்ள இவர்கள் இந்­தி­யாவில் தமிழ் நாட்­டிலும் காலூன்றி உள்­ளனர். உலகில் இவர்­களால் 52 நாடு­களில் பிரச்­சினை கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் வெள்­ளிக்­கி­ழமை பெரு­நாளைக் கொண்­டா­டும்­படி கூறிய போது கிழக்கில் வியா­ழக்­கி­ழமை கொண்­டா­டிய குழு­வினர் இவர்கள் ஏட்­டிக்குப் போட்­டி­யாக இவர்­களின் செயற்­பா­டு­களால் சிங்­க­ள­வர்­களும் தமி­ழர்­க­ளுமே பெரிதும் பாதிக்­கப்­ப­டுவர்.

முஸ்லிம்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொண்டு சிறப்பாக வாழட்டும். அதில் எவ்­விதப் பிரச்­சி­னை­யு­மில்லை. ஆனால் அர­புச்­சட்­டங்­களை இங்கு கொண்டு வர முடி­யாது. பெளத்த மதம் தொடர்­பான இழி­வான துண்­டுப்­பி­ர­சு­ரங்­களை தெளபீக் ஜமாத்­தினர் வெளி­யிட்­டுள்­ளனர். பாது­காப்புப் பிரி­வினர் இவர்­களைக் கட்­டுப்­ப­டுத்தா விட்டால் நாம் அவர்களைக் கட்டுப்படுத்துவோம்.

பெளத்த பயங்கரவாதம் என வெளியுலகிற்கு இக்குழு தவறான தகவல்களை வழங்கி உதவி பெற்று இலங்கையை துண்டாட இக்குழு முயற்சி செய்கின்றது. ஜமாத்தே இஸ்லாம் குழு கிழக்கில் இயங்குவது நாட்டுக்கு ஆபத்து. கடும் போக்குள்ள இக்குழுக்களிடம் இருந்து இலங்கை முஸ்லிம்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இன்று பிக்­கு­வாக துற­வறம் மேற்­கொள்ள வரு­ப­வர்கள் குறைவு. ஆட்­களைத் தேடிக் கண்டு பிடிக்­கவும் கஷ்­ட­மாக உள்­ளது. பிக்­குகள் முன் வந்து பெளத்­தத்தைக் காப்­பாற்ற வேண்டும் என்றார்.

6 comments:

  1. It is Muslim leaders responsibility to control these groups and not a job related to Monks. Government & forces should control Buddhist group first as they are the violators of law & order

    ReplyDelete
  2. There are some similarities between Galagoda Aththe Gnaanasaara Thero and Umar bin Al-Khattab. I hope and wish that Allah bless him too.

    ReplyDelete
  3. poda, balaichena mangoos madaya......

    ReplyDelete
  4. If any one see you as a monk, who will come to become a monk.
    Your behavior, speech, action, activities etc are more than thugs...!
    So, who will follow you...!
    And you are a real curse to Buddhism...! and a blow to it...!

    ReplyDelete
  5. Extremism must be eliminated from our lovely country weather it is Podu Bala Sena or Wahabism

    ReplyDelete
  6. hiyyo hiyyo................... i cant help laughing.
    AFTER THE INTRODUCTION OF JAMATHUL ISLAMI, THABLEEQ, THAWHEETH AND DA , SRI LANKAN MUSLIMS HAVE BEEN URGED TO STUDY REAL ISLAM AND TRY THEIR BEST TO FOLLOW IT.
    MASHA ALLAH!!

    Indeed,it's very shame to say that few of us don't know the fact and try to betray those organisation considering their own likes and dislikes and grudges they have in their minds.
    ALLAH MAY SHOW US THE DIRECT PATH AND REWARD US JANNAH!!! AAMEEN!!

    ReplyDelete

Powered by Blogger.