மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படாமல் போயிருந்தால்..!
மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படாமல் போயிருந்தால், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சிங்கள அகதிகளை சந்திக்க நேர்ந்திருக்கும் என்று அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
சிலாபம் மானுவன்கம பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் இதனை கூறினார்.2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ வெற்றிபெறாது போயிருந்தால் என்ன நடந்திருக்கும்?.
பிள்ளை அம்மையார் இன்று இலங்கையில் மனித உரிமைகளை தேடி வந்திருக்கின்றார்.எனினும் மகிந்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படாமல் வேறு ஒருவர் அந்த பதவிக்கு வந்திருந்தால், பிள்ளை அம்மையார் இலங்கைக்கு வந்து புத்தளத்தில் உள்ள சிங்கள அகதிகளை பார்க்க நேர்ந்திருக்கும்.
அன்றைய ஜனாதிபதி தேர்தலில் எவருக்கு வாக்களித்தாலும் ஒன்றுதான் என்று மக்கள் நினைத்து வாக்களித்திருந்தால், இன்று நாடு இந்த இடத்தில் இருந்திருக்காது.2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு நாடு முன்நோக்கி சென்றதா பின்நோக்கி சென்றதா என்பதை மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க போகும் சகலரும் நினைத்து பார்க்க வேண்டும்.அரசாங்கத்தில் பல குறைப்பாடுகள் இருக்கலாம். நாட்டை ஆட்சி செய்த சகல அரசாங்கங்களிடமும் குறைப்பாடுகள் இருந்தன. அதனை இல்லை என்று எவரும் கூற முடியாது என்றார்.
.jpg)
நாடு உறுப்பட்டிருக்கும்
ReplyDeleteஇன்று சிப்பாய்களும் காவல் அதிகாரிகளும் ஏனைய அரசியல் தலைவர்களும் சில ஆசிரியர்களும் நல்ல முறையில் மனித நேயத்தோடு மக்களோடு நல்ல முறையில் வாழ்ந்திருப்பார்கள்.
ReplyDeleteஒரு வயது குழந்தையை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவது நடந்திருக்காது.
சிப்பாய்கள் பாலியல் வல்லுறவுகளை செய்வது நினைத்தும் கூட பார்க்குமளவிற்கு இருந்திருக்காது.
ஆசிரியர்களை கண்டபடி நினைத்த நாய்களெல்லாம் ஏசிப்பதும் தூசிப்பதும் முழந்தாளிடுவதும் நடந்திருக்காது.
சிறுபானமையினரிடையே இந்தளவு குழப்பங்கள் வந்திருக்காது 25 பள்ளிகள் உடைக்கப்பட்டிருக்காது.
ரோட்டில் கிடந்த நாயெல்லாம் பஞ்சுமெத்தையில் தூங்கியிருக்காது.
பயங்கரவாதிகள் அரசாங்கத்திற்கு கட்டளையிட்டு அரசாங்கம் அதை நிறைவேற்றுமளவிற்கு இருந்திருக்காது.
இதுபோன்று எத்தனையோ அடிக்கிக்கொண்டே போகலாம்.
எல்லாவற்றையும் விட முக்கியமானது நாட்டின் ஒவ்வொரு குடிமகன தலையிலும் பாரிய கடன் விழுந்திருக்காது.
கழத்தில் இறங்கி உழைப்பவனுக்கு கடனாம் திருடர்களுக்கெல்லாம் பெட்டி நிறையப்பணமாம். இதில் பதவிக்காகவும் புகழுக்காகவும் மானங்கெட்ட சில ஒட்டுண்ணிகள் சொந்தக்காலில்லாத அங்கவீனர்கள்.