Header Ads



சாய்ந்தமருதுவில் 'முதுசங்கள் நால்வர்'


(ஏ.எல்.ஜுனைதீன் + யு.கே.காலிதீன்)

  சாய்ந்தமருது  பள்ளிவாசல் நிர்வாகத்தில் முக்கிய பதவிகளில் சிறப்பாகச் சேவையாற்றிய நால்வருக்கு பாராட்டும் விழா ஒன்று எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப் பின் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

  'முதுசங்கள் நால்வர்' எனும் இப் பாராட்டு விழா சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல் கூட்ட மண்டபத்தில் பள்ளிவாசல் பிரதம மரைக்காயர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனிபா தலைமையில் நடைபெறும்.

  இவ்விழாவில் பள்ளிவாயல் நிர்வாகப் பணிகளிலும் தலைவர் பதவியிலும் கல்வித்துறையில் அதிபராக நீண்ட காலம் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ள எம். சீ. ஏ. ஹமீட், சாய்ந்தமருது  பள்ளிவாயல் தலைவராக இருந்து இப் பள்ளிவாயலைக் கட்டி முடிப்பதற்கு பெரும் பாடுபட்டவரும் இப் பிரதேச அபிவிருத்திக்கு உதவியவருமான  ஐ.எம் முஹைதீன், சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாயலில் மிக நீண்ட காலமாகச் சிறப்பான முறையில் செயலாளராகக் கடமையாற்றிய அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.முஹைதீன், பள்ளிவாயலில் தலைவராகவும் மார்க்கப் பணியிலும் சிறப்பாக சேவையாற்றிய மெளலவி அல்-ஹாஜ் ஏ.ஏ. அப்துல் றஸாக் ஆகியோர்கள் பாராட்டப்பட்டு கெளரவிக்கப்படவிருக்கிறார்கள்.

  இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம். எச்.எம்.சமீல், முஸ்லிம் சமய,கலாசார அலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.எச்.எம்.ஜெமீல், சமாதானத்திற்கான சமயங்களின் அம்பாறை மாவட்ட பேரவைத் தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல், அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல்  உலமா தலைவர் மெளலவி எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி) உட்பட உலமாக்கள், மரைக்காயர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments

Powered by Blogger.