Header Ads



'பொலிஸ்மா அதிபர் பதவி விலகவேண்டும்'

பௌத்தசாசன அமைச்சில் தற்போது கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் குறித்து முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தையொன்று நடைபெற்று வருகிறது. முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள், பொலிஸ் அதிகாரிகள் என பல தரப்பினர் இதில் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது முஸ்லிம் அமைச்சர்கள், கிரண்பாஸ் பள்ளிவாசல் தாக்குதலை பொலிஸார் வேடிக்கை பார்த்ததாக பொலிஸ்மா அதிபர் இளங்ககோனை நோக்கி குறறம் சுமத்தியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் பொலிஸ் மா அதிபரை நோக்கி, முஸ்லிம்களுக்கு எதிரான இந்த அடாவடி, பள்ளிவாசல் மீதான தாக்குதல் எல்லாவற்றையும் பொலிஸார் வேடிக்கை பார்த்துள்ளனர்.  இதற்கு பொறுப்பேற்று பொலிஸ் மா அதிபர் பதவி விலக வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்களின் பிரதிநிதியாகவே நான் இங்கு வீற்றிருக்கிறேன் என் கூறியுள்ளார். இவ்வாறு வாதப்பிரதிவாதங்கள் தொடரவே ஏனைய முஸ்லிம் அமைச்சர்கள் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளதாக அறியவருகிறது.

2 comments:

  1. Chief Police you are the problem maker. Resign soon. If you can't keep peace and justice give your post to others.

    ReplyDelete
  2. வீரம் விளைஞ்ச மண்ணுய்யா.....

    ReplyDelete

Powered by Blogger.