Header Ads



ஐரோப்பா செல்லமுயன்ற 7 பிக்குகள் விகாரையில் கைது

ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சட்டவிரோதமாக செல்லும் நோக்கில் இலங்கையில் தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 7 பௌத்த பிக்குமாரை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கொழும்பு ராஜகிரியவில் உள்ள விகாரை ஒன்றில் இவர்கள் தங்கியிருந்த நிலையில் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் குடியுரிமை பெற்றுள்ள இரண்டு பங்களாதேஷ் பிக்குமார், சந்தேக நபர்களை தற்காலிகமாக துறவறம் பூணச் செய்து அந்த நாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 7 பங்களாதேஷ் பிக்குமாரை கறுப்பு பட்டியலில் சேர்த்து, அவர்களை இலங்கையில் இருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.