முஸ்லிம் சகோதரிக்கு ஒரே சூலில் பிறந்த 5 குழந்தைகளில் 4 வது குழந்தையும் வபாத்
மடவளை முஸ்லிம் பெண்மணிக்கு ஒரே சூலில் பிறந்த ஐந்து குழந்தைகளில் நான்காவது குழந்தையும் மரணமடைந்துள்ளது.
மடவளை சிரிமல்வத்தை வீதியில் வசித்து வரும் பாத்திமா பர்சிஹா என்ற 31 வயதுப் பெண்மணிக்கு கண்டி வைத்தியசாலையில் ஒரே தடவையில் ஐந்து குழந்தைகளைப் பிரசவித்தமை வாசகர் அறிந்த செய்தி.
கடந்த ஜூலை மாதம் 1ம் திகதி ஒரு குழந்தையும், 9ம் திகதி மற்றொறு குழந்தையும் 22ம் திகதி இன்னொரு குழந்தையும் மரணித்ததது. எஞ்சி இருந்த இரு குழந்தைகளுள் மற்றொன்று நேற்று (1.8.2013) இரவு பேரதனை வைத்தியசாலையில் வைத்து மரணமடைந்துள்ளது. ஜனாசா மடவளை ஜூம்மா பள்ளி மையவாடியில் இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்போது ஒரேஒரு ஆண்குழந்தை மட்டுமே எஞ்சியுள்ளது.

Inna lillahi wainna ilaihi rajiuoon.
ReplyDeletePlease check there may be behind BBS,Raywaya and Hela Urumaya.
إنا لله وإنا إليه راجعون
ReplyDelete