மெஸ்ரோ உயிரூட்டப்படுமா..? ஹரீஸ் களத்தில் குதிப்பாரா..??
முஸ்லிம் கல்வி சமுக ஆய்வுகள் நிறுவனம் (மெஸ்ரோ) வை மீண்டும் உயிரோட்டமுள்ளதாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டள்ளது.
தற்போதைய திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவனாக இருந்த கால கட்டங்களில் இந்நிறுவனத்தை ஆரம்பித்து அவர் தலைமையில் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள இளைஜர்களிடையே அரசியல் கலாசார மற்றும சமுக மாற்றங்களையும் விளிப்புணர்வுகளையம் ஏற்படுத்தி வந்தார். இதனால் கவரப்பட்ட இளைஜர்கள்.உலமாக்கள் புத்திஜீவிகள் சமுக சிந்தனையாளலர்கள் என பலர் இந்நிறுவனத்தில் இணைந்துகொண்டனர் அப்போது .மறைந்த மாபெரும் தலைவர் அஷ்ஷஹீத்.எம்.எச்எம்.அஷ்ரப் அவர்களின் ஆசீர்வாதமும் இந்நிறுவனத்திற்கு இருந்தது.
2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக பல் வேறுபட்ட நடவடிக்கைகளை எடுத்திருந்தது.அத்துடன் மாபெரும் தலைவர் அஷ்ஷஹீத்.எம்.எச்எம்.அஷ்ரப் அவர்களின் மறைவையடுத்து ஏற்பட்ட தலைமைத்துவ போட்டி இணைத்தலைமைத்துவமாக மாறிய போது தற்போதைய தலைவர் அல்ஹாஜ் ரஊப் ஹக்கீமை தலைவராக ஆக்குவதில் மெஸ்ரோ பெரும் பங்காற்றியது யாவரும் அறிந்த உண்மையாகும். திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் பாராளுமன்ற உறுப்பினராகத்தெரிவு செய்யப்பட்ட பின்னர் செயற்பாடுகள் மெஸ்ரோவின் செயற்பாடுகள் செயலிழந்து போயின.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மெஸ்ரோவின் தேவை மீண்டும் உணரப்பட்டுள்ளது.இதனை மீண்டும் ஆரம்பித்து சமுகத்திற்கு முடிந்த சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

மெஸ்ரொவும் குஸ்ரோவும் கதிரையைப் பிடிப்பதற்குத்தான் ஐயா!
ReplyDeletegood. Important 1 for our community....
ReplyDeletegood.. Important 1 for our community
ReplyDeleteமுஸ்லிம்களின் இருப்பும் மத உரிமையும் இந்த நாட்டில் கேள்விக்குறியாக உள்ளதை நாமறிவோம். எமது அரசியல் வாதிகளை நம்பி நம்பி ஏமாற்றம் மட்டுமே மீதியாகவுள்ளது. இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் சிவில் சமூகத்தின் தேவை நன்கு உணரப்படுகிறது. ஆனால் எமது சிவில் சமூக அமைப்புக்கள் வெறுமனே கூடிக்கலையும் அமைப்புக்கள் தான் அத்துடன் ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு கூஜா தொக்குகின்றன. இருப்பினும் 'மேஸ்ரோ' ஆய்வகம் சற்று வித்தியாசமானது. ஏற்கனவே அது பல விடயங்களை சாதித்து காட்டி இருக்கிறது. அது ஏற்கனேவே மக்களால் அங்கீகரிக்கப்பட்டு அதன் மூலம் எச் . எம் . ஹாரிஸ் அவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ளதை நாம் மறந்து விடக் கூடாது. முஸ்லிம் பல்கலைக்கழக சமூகத்துடன் அதேபோல் சிவில் சமூகத்துடனும் 'மேஸ்ரோ ' இணைந்து செயற்ப்பட வேண்டும் என்பது காலத்தின் தேவை.அதற்கு நாம் ஒத்துழைப்போம் ! எமது சமூகத்துக்கு எதிரான சதித்திட்டத்தை முறியடிக்க இவ்வாறான அமைப்புக்கள் இன்றைய தேவையாகும். வீணாய் தர்க்கித்து கொண்டு எமது எதிரிகளை பலப்படுத்தாமல் நாம் 'மேஸ்ரோ' கீழ் ஒன்றுபடுவோம்!
ReplyDelete