Header Ads



தமது 5 குழந்தைகளையும் 45 நாள் இடை வெளியில் பறிகொடுத்து தவிக்கும் தம்பதியினர்

(JM.Hafeez)

ஒரே சூலில் ஐந்து பிள்ளைகளைப் பிரசவித்த மடவளையில் வசிக்கும் முஸ்லிம் பெண்மணியின் ஐந்து சிசுக்களும் ஒன்றரை மாத காலத்திற்குள் மரணடைந்துள்ளன. ஐந்தாவது குழந்தை வியாழன் இரவு (15.8.2013) மடவளையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த ஜூன் 27ம் திகதி மடவளை சிரிமல்வத்தை வீதியில் வசிக்கும் பாத்திமா பர்சிஹா என்ற 31 வயது பெண்மணி திருமணம் முடித்து சிறிது காலம் குழந்தை இன்றி இருந்து பின்னர் தனது தலைப் பிரசவம் மூலம் கண்டி வைத்திய சாலையில் ஒரே சூலிழ் ஐந்து குழந்தைகளைப் பிரசவித்தார்.

பிரசவத்திற்கு முன்னர் தொடாந்து இரண்டு மாதங்களாக கண்டி வைத்திய சாலையில் தங்கி சிகிட்சை பெற்று வந்தார். வெற்றி கரமான சத்திர சிகிட்சை மூலமாக ஐந்து சிசுக்களும் பிரசவிக்கப்பட்ட போதும் அவை சுவாச வியாதியால் பீடிக்கப்டடிருந்ததன் காரணமாக இக்குழந்தைகள் கண்டி மற்றும பேராதனை ஸ்ரீமாவோ பண்டார நாயக்க சிறுவர் வைத்திய சாலை என்பவற்றில் சிகட்சை அளிக்கப்பட்டு வந்தன. 

இந்நிலையில் ஜூலை 1ம், 9ம் மற்றும்22ம் திகதிகளிலும் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி ஒரு குழந்தையும் எஞ்சி இருந்த ஐந்தாவது குழந்தை ஆகஸ்ட் 15ம் திகதியும் மரணமடைந்துள்ளன. ஜனாஸா மடவளை ஜூம்மா பள்ளியில் இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.

2 comments:

  1. I'm sure, some thing wrong "BBS,Rawaya,Sinhala Urumaya etc... be carefull like this issues. They will do something with the help of nurses and doctors definetly.

    ReplyDelete
  2. 'பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகளை (ஒரு பெண் பறிகொடுத்தால் அவளை நரகத்திலிருந்து காக்கும் திரையாக அக்குழந்தைகள் இருப்பார்கள்)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் வாயிலாக இடம் பெற்றுள்ளது.
    Volume :1 Book :3

    ReplyDelete

Powered by Blogger.